இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 9 நீ நினைக்கும் போதை வரும் ....நன்மை செய்து பாரு..

படம்
அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 9 அன்பு சொந்தங்களே ... இந்தத் தொடரின் இந்த சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி பகுதியை ஆரம்பிக்கும் போதே டாக்டர்.நரசிம்மன் அவர்களும் டாக்டர் M.V .இராசகோபால் அவர்களும் தான் நினைவுக்கு வந்தனர். மருத்துவர் இராசகோபால் அவர்களிடம் நானே நிறைய பேசியிருக்கிறேன், கபடிப் போட்டிகள் நடத்துகிறேன் பேர்வழி என்று திண்ணன் செட்டி ஊரணியில் இருந்து சம்பந்தமே இல்லாத ஆர்ச் பகுதியில் அவரிடம் இருந்து நிறைய முறை நன்கொடை வாங்கி இருக்கிறேன். நன்கொடை என்று சொல்வதை விட முதல் பரிசு வழங்குபவர் நீங்கள் தான் என்று மொத்தமாக சரணாகதி அடைந்து இருக்கிறேன். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கையில் இருப்பதைக் கொடுப்பார். மீதம் போட்டி நடக்கும் நேரம் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொஞ்சம் நாங்கள் பெருந்தன்மையாக வந்து விட்டு இங்கே போட்டி நடக்கும் நேரம் நான் பணம் கேட்டு அவர் வீட்டில் அமர்ந்து இருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. நோயாளி வந்து வைத்தியம் பார்த்து அவர்களுக்கு தன் செலவிலேயே மாத்திரை மருந்தும் கொடுத்து அவர்கள் கொடுக்கின்ற சிறிய கட்டணத்தையும் அப்படியே அவர் பைக்குப் போ...

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2..பகுதி: 8 MGR ம்....MVR ம்...

படம்
  அசை   போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2   பகுதி: 8   MGR ம்....MVR ம்...   அன்பு உடன் பிறப்புக்களே ,    செ ஞ்சோற்றுக் கடன் என்று கேட்டு இருக்கிறோம்.   யாரேனும் ஒருவர் தான் வாடும் காலங்களில் ஆதரித்தால் அதிலும் முக்கியமாக உணவு அளித்தால், அவருக்கு அந்த நன்றியை மறவாமல் விசுவாசமாக இருப்பதை செஞ்சோற்றுக்கடன் என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன்.   நம் தேவகோட்டை மக்கள் அதற்கெல்லாம் ரொம்ப ரொம்ப மேலே…   ஆர்ச் வளவை ஒட்டி திரு.ராம் ஐயர் சிற்றுண்டிக்கடை ஒன்று இருந்து இருக்கிறது.   மிகவும் குறைந்த விலையில் நல்ல ருசியில் தரமான இட்லி, மொச்சை மற்றும் இவரது கார சட்டினி மிகவும் பிரியமானதாம்.. உண்மையில் அந்தக் கடை நினைவில் இருந்தது, ஆயின் அதிகமாக இழுக்க வேண்டாமே என்று அதை விட்டு விட்டேன்.   அந்த உணவின் ருசியின் நன்றியில் இருந்த நம் அன்பர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.   என்னை ஐந்து ஆறு பேர் உரித்து எடுத்து விட்டார்கள்..    ஆய்ஞ்சு விட்டார்கள்.   இன்னொருவர், இதன் எதிரே இருந்த கணேச பவன் விடுபட்டு விட்டதே ...