இடுகைகள்

வீரபத்திர பிள்ளை மரக்கடை;கேயெம்மெஸ் (K.M.S) ;விகடம் கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 59

படம்
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 22-07-2018 பகுதி: 59 அன்பு நண்பர்களே. .. எப்படியோ ஒரு இரண்டு மாத கால இடைவெளி விழுந்து விட்டது.  ஜூன் மாத மத்தியில் இருந்து மாதக் கடைசி வரை தாயகம் வந்து இருந்தது ஒரு காரணம். இரண்டு வருட இடைவெளியில் வந்ததனால் 40 நாளில் செய்ய வேண்டிய பணிகளை 4 நாட்களில் முடிக்க நினைத்து நாய் படாத பாடு பட்டது,விடுமுறையை அனுபவிக்கவே இயலாமல் செய்து விட்டது.  எத்தனையோ பேரைக் கண்டு மனம் மகிழ அளவளாவ விரும்பி வந்து எதுவும் இயலாமல் சந்தித்தவர்களையும் அவசர கதியில் பார்த்து வர நேர்ந்தது கொஞ்சம் வேதனைதான்.  அதை விடக்  கொடுமை அலுவலகத்தின் அவசர அழைப்பால்  அனுமதி வாங்கி வந்த விடுப்புக்காலம் முடியும் முன்னரே திரும்ப நேர்ந்தது. கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை கையில வேப்பிலையோடு ஆடிச்சாம்... அந்த வகையில் இந்தோனேசியா வந்து சேர்ந்து இன்னும் பழைய பணிகளின் அழுத்தத்தில் இருந்து விடுபட இயலாமல் தவிக்கிறேன்.  உணர்வால் அன்பர்களோடும், உழைப்புக்காக இங்கும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாக நிற்கிறேன்....