அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 54
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 08-05-2018 பகுதி: 54 அன்பு நண்பர்களே, தங்களின் அன்பு மழையில் நனையும் பெரும் பேறு பெற்றேன். 12 மணி நேரம் அலுவலகப் பணி முடித்து, இரவில் பல தரவுகளை ஆய்வு செய்து எழுதிய போது எழுந்த சோர்வு, உங்கள் பின்னூட்டங்களைக் கண்டதும், மகிழ்ச்சியாய் மலர்ந்து விட்ட வேதியல் வினை ஏற்பட்ட உணர்வுகளோடு தொடர்கிறேன். பழந்தமிழர் கடற் பயணங்களை ஆய்வு செய்ய முற்பட்டு எத்தனையோ அரிய ஆச்சரியம் ஊட்டும் தகவல்களை அறிய நேரிடுகிறது. உண்மையில் நாம் அசை போட ஆரம்பித்தது தேவகோட்டையின் நினைவுகளைத்தான். ஆனால் தேவியர் கோட்டையான தேவகோட்டைக்கு செல்வம் சேர்த்ததும் கடற் பயணங்கள் தான் என்பது மாற்ற முடியாத உண்மை. பர்மா ஆகட்டும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகட்டும், நம் ஊர் செழிக்க பேர் மணக்க செல்வம் கொழிக்க வைத்தது நம் நகரில் வாழ்ந்த முன்னோர்களின் கடற் பயணங்கள் தாமே.. தூசு படிந்து கிடைக்கும் தொன்மை நினைவுகளை மாசு களைந்து மறுபடி காட்டுவது தானே இந்தக் கட்டுரையின் இலக்கு. எனவே நம் நகருக்கு சமபந்தமான நினைவுகளைத்தான் அசை போடுகிற...