தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 31-குப்தர், பல்லவர் மற்றும் தென்கிழக்கு ஆசிய அரசியல் மாற்றம்-இந்தியப் பண்பாட்டு பரவல்
குப்தர், பல்லவர் மற்றும் தென்கிழக்கு ஆசிய அரசியல் மாற்றம் குப்தர் எழுச்சி – வடஇந்தியப் புதிய அதிகாரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் “குப்தர்” எனும் புதிய இந்திய அரச வம்சம் எழுச்சி பெற்றது. சமுத்திரகுப்தர் (கி.பி. 335–375) தனது இராணுவ வெற்றிகளால் குப்தப் பேரரசை விரிவுபடுத்தி, வடஇந்திய அரசியல் வரைபடத்தை மறுசீரமைத்தார்¹⁸. அவரது தெற்குப் படையெடுப்புகள் வடஇந்திய ஆதிக்கத்தை தென்னிந்திய எல்லைகள்வரை கொண்டு சென்றன. இந்த அரசியல் அழுத்தம் பல எல்லைப் பகுதிகளில் மறுசீரமைப்பை உருவாக்கியது. இராமகுப்தர் மற்றும் மேற்குச் சகர்களின் மோதல் கி.பி. 380ஆம் ஆண்டு, சமுத்திரகுப்தரின் வாரிசான இராமகுப்தர் குஜராத் மற்றும் மாள்வா பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மேற்குச் சக சத்ராபர்களுக்கு எதிராகப் படையெடுத்தார். ஆனால் அவர் தோல்வியுற்றார்; அவரது படைகள் முற்றுகையிடப்பட்டன. சமஸ்கிருத நாடக மரபில் “தேவிச்சந்திரகுப்தம்” என அறியப்படும் இழந்த நாடகத்தின் சான்றுகள் இச்சம்பவத்தை விவரிக்கின்றன¹⁹. கதைப்படி, தனது உயிரைக் காப்பாற்ற இராமகுப்தர் தனது அரசி துருவாதேவியை சக அரசரிடம் ஒப்படைக்கத் தயார் ஆனார். ...