அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 20 நூறு வயசு வரை வாழ நினைப்பவருக்கு யோசனை
காலம் கரைக்காத நிகழ்வுகளே இல்லை. சிலர் வாழ்ந்த காலத்தை ஒரு குறிப்பீடாக இங்கே வைத்து விட்டுச் செல்கிறார்கள். அதனால் தான் மனிதர் மறைவினை ' காலம் ஆகி விட்டார் ' என்ற வாக்கியத்தில் குறிக்கிறோம். ஆயினும் அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே காலம் என்னும் கரையான் அரித்து விட இயலாத பெரு வாழ்வு வாழ்கின்றனர். அப்படி ' காலத்தை வென்றவர்... காவியம் ஆனவர் ' மக்கள் மனதில் என்றும் வாழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் நடித்த திரைப்படங்களில் அவருக்காக எழுதிய பாடல்களே அவரது வாழ்வினை என்றும் காட்டும் வண்ணம் வாழ்ந்தவர். அவர் நடித்த ' என் அண்ணன் ' என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இந்த வரிகள் இடம் பெறும் . ' என் அண்ணன்' திரைப்படம் நூறு வயசு வரை வாழ நினைப்பவருக்கு யோசனை வைத்திருந்தால் சொல்லு சொல்லு.... நீ சொல்லு...சொல்லு... சாமி .. தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால் நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு... ஒரு நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு தனக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் படி இவர் வாழ்வை அமைத்துக்க...