எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-10. சிலைகள் சொல்லும் கதைகள்
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் ( தெற்கத்தியான் )-10. சிலைகள் சொல்லும் கதைகள் இராமாயணமும், மகாபாரதமும் பாரதத் திருநாட்டில் பல காலம் நின்று நீடூழி வாழும் இதிகாசங்கள் இராமாயணமும், மகாபாரதமும். மனித குலத்துக்கு மரபையும் மாண்பையும் கற்றுக்கொடுக்கும் பல சம்பவங்கள் நிறைந்த கதைகளை இருப்பதனாலேயே என்றும் வாழுகின்றன இந்த இதிகாசங்கள். கட்டிய கதைகளாய் இவற்றைச் சுட்டிய போதிலும் அகண்ட பாரதம் முழுவதும் ஆட்சி புரிந்த இவை இன்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து. கம்பூச்சிய பகுதிகளில் பரம்பரையாய் வாழ்கின்றன. புராண கதா பாத்திரங்கள் இல்லாமல் இந்த இதிகாசங்கள் இல்லை. வால்மீகி வாக்கில் வந்த கதைக் கட்டங்கள் கம்ப நாடன் கவிதையில் காவியமான போது தமிழகத்தின் பண்பாடுக்கு ஏற்றபடி எவ்விதம் சில மாற்றங்களை தன்னுள் ஏற்றிக்கொண்டதோ அதே போல இங்கே தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அந்தந்த மண் மணம் வீசுவது போல மூலம் குறையாமல் காலம் வடித்து இருக்கிறது. சிரஞ்சீவி மாருதி நமது கதைகளில் வரும்...