எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ??!! - அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 11
அன்பு சொந்தங்களே ... பழங்கதை பேசி மார் தட்டிக் கொள்வது ஏற்புடையதா என்ற ஓர் கேள்வி அடிக்கடி நம்முள் ஒலித்துக் கொண்டே இருக்கும். வீண் என்று சொல்லும் வேதாந்திகளும் உண்டு. வெந்ததை தின்று விதியே என்று கிடப்போர்க்கு இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ஒரு வேறுபாடும் இல்லை . ஆனால் துவண்டு, நைந்து, நொந்து நூடுல்ஸ் ஆனவர்களை 'ஐயா, எழுந்திரு ..... சிங்கம் நீ... இன்னாரின் வழித்தோன்றல் நீ.. ஆளப்பிறந்தவன் நீ... அழப் பிறந்தவன் அல்ல ...' என்று தன் வலிமை தனக்கே தெரியாத தம்பியருக்கும் தங்கையருக்கும் அவரவர் உயரம் இத்தகையது என்று எடுத்து இயம்ப நமது முன்னோரின் தோள் வலியும், துஞ்சா உழைப்பின் வழியும், அவர்தம் நுண்மாண் நுழைபுலம் பற்றியும் பேச வேண்டி இருக்கிறது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என மறைந்த நடிகர் விவேக் அவர்கள் பாணியிலே ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளவே தோன்றுகிறது. உண்மையில் நாடு பற்றி பேசும் முன் நமது நகர் பற்றி பேசுவோம். ஒரு இரண்டு தலைமுறை இடைவெளியில் வலிமையில் வனப்பில் மலிந்தோமோ, நலிந்தோமோ, உயர்ந்தோமோ என...