அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 2
அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 2 சிலம்பணி விநாயகர் சன்னதி நலம்பல நயக்க நாவளம் பயக்க குலம்குடி உய்க்க குவலயம் சிறக்க தலமதில் உயர்தேவி தமிழ்நக ரெழும் சிலம்பணி விநாயகன் சீரடியே சேர் சிலம்பணி விநாயகர்.... வேறு எந்த நகருக்கும் இல்லாத எத்தனையோ பெருமைகளில் தனித்துவ குணங்களில் தாளில் சிலம்பினை அணிந்து நகரின் சீலம் காக்கும் சிலம்பணி விநாயகர் தேவகோட்டையில் எழுந்து அருள்வதும் ஒன்று. இந்த சிலம்பணி விநாயகர் சன்னதியில் தான் தேவகோட்டை நகரின் மகுடமான 'ஆர்ச்' (ARCH ) என்று அழைக்கப்படும் அலங்கார வளைவு கம்பீரமாக நிற்கிறது. இந்த ஆர்ச் பகுதியில் தான் நாம் இப்போது நிற்கிறோம். ஆர்ச்சின் வலது பக்கம் இருந்த மொச்சைக்கடை பற்றி இதற்கு முந்தைய பதிவில் கண்டோம். இந்தத் தொடர் பல பெரிய ஆளுமைகளை எமக்கு வழங்கி கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெரி...