அசை போடும் தேவகோட்டை நினைவுகள் பாகம்: 2; பகுதி: 3
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை இந்த பிரபஞ்சத்தில் ஆத்மா அழியாதது. இந்த உடலை ஆன்மா கொஞ்ச காலத்துக்கு மேலாடை போல உடுத்தி விட்டு நேரம் வரும் போது பாம்பு சட்டையை கழற்றுவது போல போட்டு விட்டு சென்று விடுகிறது.. அந்த ஆன்மாவின் வேறுபட்ட உருவங்கள் தான் நாம் காணும் வடிவங்கள்.. படிவங்கள்... என்றும் சிரஞ்சீவியாக வாழும் தேவி நகர் தேவகோட்டைக்கு வாழும் மனிதர்களாகிய நாமும், நம் முன்னோர்களும், கட்டிடங்களும் இந்த நகரம் கழற்றி போடும் சட்டைகள்தான். சட்டை செய்வது நம் கடமை... நாம் வந்து போகின்ற வழிப்போக்கர்கள் மட்டுமே... நினைவுகள் மட்டுமே மிச்சம்.... எந்தம் அன்பு பூமித்தாய்... நினைவுகளை மட்டுமே சேமித்தாய் இந்த மாபெரும் காலத் தொடரிலே நமது சிந்தனைக்கு எட்டிய சிலரை, நம் மண்ணிலே வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் நினைவுகளை பகிர இந்த தொடரை பயன் படுத்திக்கொள்வது நல்ல பணி என்று நினைக்கிறேன். தமிழுக்கும் நமது தேவகோட்டைக்கும் நிறைய தொடர்பு உண்டு. நம் பகுதியைச் சேர்ந்த பிராமணர்கள், தமிழுக்கும் சமூகத்துக்கும் நி...