இடுகைகள்

பரஞ்சோதி; பெத்து பிள்ளை; அம்பிகாபதி; கிருத்திகா மெஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 15

படம்
  அன்பு சொந்தங்களே ... இந்தக்   கார்த்திகை மழைச் சாரலோடு சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயத்தின் வலது புறம் திரும்ப எண்ணி இருக்கும் போது , அதே சன்னதி தெருவின் இடது வரிசை வீடுகளின் அருகே அன்றைக்கு பெய்த இசைச்சாரல் இனிமையாக நம் காதுகளில் ஒலிக்கிறது.   இதற்கு முந்தைய பதிவுகளிலும் பட்டும் படாமல் சிலம்பணி சன்னதியில் விடாது ஒவ்வொரு வருடமும் நடை பெற்றுவந்த ' தியாகப் பிரம்ம   உத்சவம் ' பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம்.    மருத்துவர் வைத்தியநாதன் , வழக்கறிஞர் ராமசாமி அய்யர் , ஆசிரியர்கள் பத்மநாபன் , சோமசுந்தரம் இன்னும் பலர் சேர்ந்து இன்னிசையாய் , இராக வடிவாய் வாழும் தியாகராஜரின் விழாவினை தியாகப் பிரமோத்சவம் என்ற பெயரில் பதினோரு நாள் நிகழ்வாக வருடந்தோறும்   நடத்தி வந்தார்கள்.   அதிலும் ஆசிரியர் அமரர் பத்மநாபன் இந்த நிகழ்வுகளில் மிகுந்த அக்கறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார். கார்த்திகை மாதம் கார் காலம்...ஐப்பசி அடை   மழைக்காலம்...பல வருடங்கள் பெய்யாது பொய்க்கும் மழை சில ஆண்டுகளில் பேய் போல் இறங்கி ஒரு ' காட்டு காட்டி ' விட்டுத்தான் ஓயும் , இந்த 20...