இடுகைகள்

சிலம்பணி படித்துறை; மாவீரர் அமரர் ரூசோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 14- சிலம்பணி படித்துறை

படம்
  அன்பு சொந்தங்களே ... இந்த சிலம்பணி சன்னதி தெருவை விட்டுச் செல்வதற்குள் சில விட்டுப்போன சில செய்திகளை மட்டும் பார்த்து விட்டுச் செல்வோம். .சன்னதி தெருவில் மருத்துவர் திருமதி.அமுதா காசிநாதன் அவர்களின் மருத்துவமனைக்கு அடுத்து ஒரு வீடு. இது அன்றைய நாளில் தேவகோட்டை நகரில் பிரபலமாய் விளங்கிய R.R.M. பாண்டியன் பிஸ்கட் பேக்கரி உரிமையாளர் அவர்களின் வீடு. அதை அடுத்து இருக்கின்ற கட்டிடமும் மருத்துவர் அமுதா காசிநாதன் அவர்களுடையது. அதனை அடுத்து ஒரு சுற்றுச்சுவர் எழும்பிய இடம் அதிக காலமாக அப்படியே கிடக்கிறது. நாம் முந்தைய பகுதிகளில் சந்தித்த அட்வகேட் திருவாளர் வேங்கடபதி அவர்களுடன் நகரத்தார் உயர் நிலைப் பள்ளியிலும் அதன் பின்னர் இன்டர்மீடியட்டும் பயின்றவர் திரு.VR.சண்முகம் அவர்கள். அதன் பின்னர் சண்முகம் அவர்கள் தமிழில் முதுகலை பட்டம் பெற்று, தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்தார். தேவகோட்டை, காரைக்குடி மற்றும் புதுவயல் இந்த ஊர்களில் வீரபத்திர பிள்ளை மரம் ஓடு வியாபார நிறுவன்ங்கள் அன்றைக்கு மிகச் சிறப்பாக விளங்கின. தேவகோட்டை நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்தை ஒட்டி மிக விசாலமாய் கம்பீரமாய் நின...