இடுகைகள்

ARCH ANNA ARANGAM லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 6

படம்
  அண்ணா அரங்கம் பற்றி பார்த்தோம்.   இந்தத் திடலில்   பல் சுவையும்   பரிமளிக்கும். மேடை மீது மட்டுமல்ல.   மேடைக்கு கீழேயும், பார்வையாளர்களிடம் இருந்தும்.   இன்று போல கட்சிகள் கார்போரேட்டுகளாக இல்லாத காலம்.   ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் கூட்ட அமைப்பாளர் கட்டாயம் கையில் இருந்து காசு போட்டுத்தான் ஆக வேண்டும்.   அதிலும் பொதுவுடைமை கட்சிகளின் சார்பில் நடக்கும் கூட்டங்களுக்கு, மேடையில் பேச்சாளர் பேசிக் கொண்டு இருக்கும்போதே அவரை இடை மறித்து ஒலி வாங்கியில் ஒரு தொண்டர் உரக்கக்கூட    கூறுவார், "தொண்டர்கள் துண்டேந்தி வருகிறார்கள்,   இயன்றதை அளியுங்கள்'   என்று ... அதே நேரம் பார்வையாளர் பகுதியில் 4 அல்லது 5 பேர் உண்டியல், அல்லது தோள் துண்டை ஏந்தி வருவார்கள்.   இதில் மிகவும் சுவாரசியமான ஒரு நபர் ஆர்ச்   உழியன் தான் .   இவர் ஐஸ் விற்பதை பற்றியும் இவரது தி.மு.க.பற்றுப் பற்றியும் முதல் பாகத்திலேயே விபரமாக அசை   போட்டோம்.   இருந்த போதும் அவர் இந்த அண்ணா அரங்கத்தின் தி.மு.க. மேடைகளில் தன்   முகம் காட்டாமல் இ...