இடுகைகள்

MDT லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 56

படம்
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 17-05-2018 பகுதி :  56 அன்புச் சொந்தங்களே , சென்ற பகுதியில் வலம்புரி ஸ்டோர்ஸ் முன்புறம் இருந்தோமோ ? .   சென்ற பகுதியின் பதிவில் ஒரு முக்கிய திருத்தம் .   நான் குறிப்பிட்டது போல வலம்புரி ஸ்டோர்ஸ் உடனடியாக மாணவர்களால் எரிக்கப்படவில்லை . அன்பு நண்பன் மதுரையில் இருந்து தொலை பேசி மூலம் அழைத்து மாணவர்களின் ஆரவார , ஆர்ப்பாட்ட , கடை எரிப்பு சம்பவங்கள் மாணவர்களால் நன்றாக திட்டம் தீட்டப்பட்டு அடுத்த நாள் அரங்கேறியது என்று தெரிவித்தார் . மேலும் ,  இந்த வலம்புரி ஸ்டோர்ஸுக்கு முன்புறம் இந்த சம்பவம் நடந்த அன்று ஒரு தெருவோர ,  கைலி / லுங்கி வியாபாரி பெரிய காண்டா விளக்குகளின் வெளிச்சத்தில் கடை போட்டு வியாபாரம் செய்து கொண்டு இருந்திருக்கிறார் .   இந்த மாணவர் கூட்டம் அந்த விளக்குகளை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை கடைய மீது ஊற்றி அந்த விளக்கின் சுடரிலேயே கடையைப் பற்ற வைத்து விட்டதாக விபரம் சொன்னார் ....