அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 17; நீதி அரசர் கற்பக விநாயகம்
அன்புச் சொந்தங்களே ... எனது தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவப் பருவத்தில் ஒரு நண்பன்... அவர் பெயர் திரு.கோபால். எனது நண்பர்களும் பின்னர் உறவினரும் ஆன தேவகோட்டை தமிழ்க் கொண்டல் ஆ .குமார் , திரு.இராஜகோபால் என்ற ஆசைத்தம்பி (மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் அங்குச்சாமியின் தம்பி) இவர்கள் எல்லாம் ஒரு குழு. இதில் எங்கள் திண்ணன் செட்டி ஊரணிப் பகுதியில் இருக்கும் ' மாணிக்க வித்தியாசாலை ' பள்ளியின் சார்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளியின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக நாடகங்கள் நடத்துவார்கள். இதில் இந்த கோபால் மற்றும் ஆ . குமார் அதிகமான ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். நானெல்லாம் ஒத்திகையை வேடிக்கை பார்க்கிற வெட்டியானவன். இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் இந்த கோபால் மாணிக்க வித்தியா சாலையின் மாணவர் அல்ல. ஆனால் அரங்கத்தின் ஆர்வத்தால் மட்டுமே இங்கு வந்து நடிப்பார்... அவரது தொடக்கப்பள்ளி காந்தி ரோடில் நான் பயின்ற அதே புனித ஜான்ஸ் பள்ளி. அவரது இல்லம் அன்றைக்கு இருந்த இடம் தேவகோட்டையில் பழைய சருகண...