தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்
தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள் அந்தக் காலத்திலேயே ஒரு ஒழுங்கு முறையுடன் , முத்தமிழும் முழங்க சைவம் தழைக்க அதே நேரத்தில் மனம் மகிழ் விதமாகவும் , அறிவார்ந்த விதமாகவும் நிகழ்ச்சிகளை நிரவி வழங்கி வந்த தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாக் கழகத்து பெரியோர்களை மீண்டும் ஒரு முறை வணங்கி சில நினைவுகளை அசை போடுகிறேன் . கந்தன் விழா என்ற போதும் ஒரு ஒழுங்கு முறை ... எம்முடைய தேவகோட்டைக் காலத்தில் ( நகர் நீங்கி 37 வருடங்கள் ஓடி விட்டன .. தற்போது நினைவுகளில் மட்டுமே கந்தன் கழக நிகழ்வுகள் எம்முள்ளே ). முதல் நாள் நிகழ்வினைத் தொடர்ந்து பல்லாண்டுகளாகத் தொடங்கி வைப்பவர் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் . முதல் வரிசைகளில் அமர்ந்து கதை கேட்டு இடைஇடையே வரும் அவரது வினாடி வினாக்களுக்குப் பதிலிருத்து சிறிய புத்தகங்கள் பரிசாய் பெறுவதில் போட்டி இட்ட நண்பர்கள் முகங்கள் சில நினைவில் நிற்கின்றன . அதே நாளில் வாரியார் சுவாமிகளுக்குப் பின்னும் அதற்கு அடுத்த நாளும் , இலக்கியப் ...