தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 23-ஐநூற்றுவர்
ஐ ந் நூற்றுவர் இந்திய மொழிகள் மற்றும் உரைகள் எழுதப்பட்ட பழைய கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் உள்ளன. இந்து மற்றும் பௌத்த மதக்கருத்துக்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மன்னர்களால் சமஸ்கிருத மற்றும் பாலி மொழிகளில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அவை தென் தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து தனி நபர்கள் அல்லது குழுக்கள் மூலமாகத்தான் பெறப்பட்டன. காஞ்சியும், மதுரையும் சமண, புத்த மதங்களில் திளைத்திருந்த காலமும் தமிழகத்தில் உண்டு. (உதாரணம்:'போதி தர்மர்" நிறுவிய Shaolin Temples. ) ஆயினும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இடைக்கால கல்வெட்டுகள் சுமத்ரா மற்றும் தீபகற்ப தாய்லாந்து, தென்கிழக்கு ஆசியா, சீனாஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் தமிழ் வணிகர் சங்கங்கள், இந்த நாடுகளில் நிரந்தரத் தமிழ் குடியிருப்புகளை நிறுவிய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தையும் பொருளாதாரம், அதிகாரம் மற்றும் அரசியல் இவற்றில் கீழ்த்திசை நாடுகளில் கோலோச்சிய உயரிய நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது ஒன்பதாவது நூற்றாண்டில் இறுதியில் மலபார் கடற்கரையில் கொல்ல...