இடுகைகள்

PANJANGAM AIYANGAR லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 4

படம்
  சிலம்பணி சன்னதி தெரு இப்போ மறுபடியும் ஆர்ச் வளவுக்குள்ளே செல்வோம்.      உங்களை எல்லாம் ஒரு 90 ஆண்டுகளுக்கு முந்தைய தேவகோட்டை எப்படி இருந்து இருக்கும் என்று ஒரு கற்பனையோடு இங்கே நிழலாக வார்த்தைகளில் வந்து செல்லும் வடிவங்களை அவர்கள் தற்போது உங்கள் முன் இருப்பதாக நினைத்துக் கொண்டு நிகழ்வுகளை வாசிக்கும் படி வேண்டுகிறேன்.   90 வருடங்களுக்கு முந்திய நினைவுகளை பெரியவர்களிடம் இருந்து அதிலும் குறிப்பாக வழக்கறிஞர் வெங்கடபதி அய்யா அவர்களிடம் இருந்து கேட்டு அத்துடன் என் மனதில் தேங்கி நிற்கும் நினைவுகளைக்   கலந்து ஒரு 90 வருட கால நினைவுகளை இங்கே வடிக்கிறேன்.    உங்கள் அனைவரது பின்னூட்டங்கள் மிக மிக அவசியம்.   இப்போ ஆர்ச்சின் வலது புறம், அதாவது சிலம்பணி சன்னதி தெருவின் தெற்கு வாடையில் நமது நகர்வைத் தொடர்வோம்.   ஆர்ச்சின் வலப்புறத்தை   ஓட்டிய   ஆர்ச்சை ஒட்டி ஒரு கோனார் பெட்டிக்கடை இருந்தது. அவர்.வீடு வீரபாண்டியபுரம் கிழக்குதெருவில் இருந்தது. அவர் சட்டை அணியமாட்டார்.  அடுத்து கணேஷ் காபி ஹோட்டல், நாயாயணவிலாஸ் ஹோட்டல் போட்டி ஹோட்டல...