இடுகைகள்

இன்ப நிலையம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 ; பகுதி: 5

படம்
  இப்ப நாம சிலம்பணி சன்னதியில் தெற்கு வாடையில் லட்சுமி டாக்கீஸுக்கு பின் ருக்மணி அம்மா வீட்டைத் தழுவி வடக்கிலிருந்து தெற்காக ஓடி வருகின்ற கால்வாய் இன்றைய அன்பு மருத்துவமனை பக்கம் வந்து இந்த சன்னதி தெருவுக்குக்   கீழே ஓடி மீண்டும் தலை காட்டும்   இடத்தில் நிற்கிறோம்.   இந்த கால்வாய் நீர்   அடுத்து இருக்கும் வெள்ளாளர் தெருவுக்கு ஓடி நகரின் கிழக்கே இருக்கின்ற கற்குடி கண்மாயில் கலக்கும் வரையான அருமையான நீர் மேலாண்மை கொண்ட நன்னகரம். இது பற்றி எமது முதல் பாகத்தில் மிகத்தெளிவாகக்   குறிப்பிட்டு இருக்கிறேன்.   உங்களுக்கும் தெரியும். இன்று மற்ற   நகரங்களை போலவே தேவகோட்டையில் நீர் வாய்க்கால்களிலும் , கால்வாய்களிலும் ஓடி குண்டு , குளங்களை நிறைத்து சில இடங்களில் ஊர் உண்ண   நன்னீர் கொடுக்கும் ஊரணிகளாக நிறைந்து கண்மாய் போய்ச் சேர்ந்து நிலம் உபரியாக இருக்கும் போது   மடை திறந்து விருசுழியில் நுங்கும் நுரையுமாக புனல் ஓடிய நிலை மாறி இன்று தார் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் அறிந்து கொள்வது வேதனை அளிக்கிறது.     கோ...