இடுகைகள்

KALASAN லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-9. சண்டி

படம்
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் ( தெற்கத்தியான் )-9. சண்டி                                    1988 மார்ச் மாதம் சண்டி கலசானில் நான்  சண்டி 1988 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மத்திய சாவகத்தின் (CENTRAL JAWA) துறைமுக நகரமான செமராங் (SEMARANG) நகரில் தங்கி இருந்து பணி புரிந்த   காலம் .   பணிக்குச் செல்லும் வழியில் மலை மீது இருக்கும் ஒரு கோவில் கண்ணுக்குள் வந்து போகும் .   லிங்க வடிவில் உயர்ந்த வட இந்திய பாணியில் பிரமிடு போன்ற கோபுரங்களைக்   கொண்ட அந்தக் கட்டிடம் கண்ணில் பட்டதுமே எதோ ஒரு அலை மனதில் தோன்றும்.   அது என்ன கோவில் என்று மகிழுந்து இயக்குபவரிடம் கேட்டேன்.   அது அந்தக்காலத்துச் 'சண்டி' என்றார் .   பின்னர் தான்   தெரிந்தது இந்தோனேசியாவில், குறிப்பாக சாவகம் முழுவதும்   இந்த 'சண்டி' என்று அழைக்கப்படும் கோவில்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்ற புராதன சம...