22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- 22.தென்னாடும் தென் கிழக்கு ம் இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து.... ஜகார்தா அருங்காட்சியகத்தில் அடுத்து நம் கருத்தைக் கவர்ந்தது ஒரு அரிய சிலை . அமோக பாசர் ( Amoghapasa ) என்னும் அவலோகி தர் ( Avalokiteshvara ) சிலை . ஏதோ சாவக பூமியின் பழைய சிலை என்ற எண்ணத்தோடு இலேசாக எட்டிப்பார்த்த எனக்கு அந்தக் கற்சிலை 13 ஆம் நூற்றாண்டின் அரசியல் , சமூக , பொருளாதார , ஆன்மிக குறிப்புகளை கொட்டிக் கொடுக்கும் என்ற எண்ணம் சிறிதளவும் அப்போது தோன்ற வி ல்லை . இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றால் , தமிழகத்தின் சோழ நாடு , பாண்டிய நாடு , இலங்கை , கிழக்கு சாவகம் ( EAST JAVA ), சுவர்ணபூ மி ( SUMATRA ), மலாய் ( MELAYU ) என்று இத்தனை மண்ணின் நிகழ்வுகளை யும் தன்னு ள் அமைதியாக அடை காத்து கல்லாய்ச் சமைந்து இருந்தது . கொஞ்சம் ஆய்வு மேற்கொண்ட போது சீன தேசத்தின் குப்ளாய் காண் ...