அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 57
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 2 1-05-2018 பகுதி : 57 எனக்கும் என் அன்பு சொந்தங்களின் மனப்பாங்கு போலவே , பழைய வரலாற்று நினைவுகளை அறிந்து கொள்வதில் மிகுந்த விருப்பம் . அதிலும் நமது நகரான தேவகோட்டையில் பேருந்து நிலையத்தின் பழங்கால சுவடுகளை நினைவுகளாக்கி நமது சொந்தங்களுடன் பகிரும் பொது ஏற்படும் மன மகிழ்வுக்குப் பஞ்சமே இல்லை , வானமே எல்லை ... ஒரு நகரில் பேருந்துகள் வந்து போகின்றன என்றால் , அந்த ஊருக்கு மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று பொருள் சரிதானே ? பேருந்து இயக்கம் தொழில் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்குத் தெரியும் . தொழில் நுட்ப ( TECHNICAL) அறிவும் வேண்டும் , பொருளாதார செறிவும் ( ...