இடுகைகள்

DEVAKOTTAI COLLEGE STUDENTS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 55

படம்
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 12-05-2018 பகுதி: 55 சென்ற பகுதியில், ‘கோஷ்டி வீரம்’ பற்றி அடுத்துப் பார்ப்போம் என்று முடித்து இருந்தோம். வீரம், வீரன் தெரியும்..அதென்ன கோஷ்டி வீரம்?.   சிலர் தனியாக இருக்கும் போது தொடை நடுங்கியாக இருப்பர்.   கொஞ்சம் கோஷ்டி அவருடன் சேர்ந்து விட்டால் போதும்,   வீரம், பீரிட்டு எழ பெரும் வீரர்கள் ஆகி விடுவர்கள்.   இவர்கள் தான் கோஷ்டி வீரம்.   பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலாட்டாவில் இந்தக் கோஷ்டி வீரம் உள்ளே புகுந்து ஒவ்வொருவரையும் சாமியாட வைத்து விடும்.   இதே வீரர்களைத் தனியாக விட்டால், பசு மாதிரி சாது ஆகி விடுவார்கள். இதற்கு முன், காரைக்குடியில் ‘அருணாச்சலா டாக்கீஸ்’ இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘ராஜா’ என்ற திரைப்படம் வெளியான அன்று, காரைக்குடி, அழகப்பா கல்லூரி மாணவர்களால், இந்தத் திரை அரங்கம் தீயிடப்பட்டது.   நடிகர், தயாரிப்பாளர், பாலாஜி அவர்களின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், சமீபத்தில் காலம் சென்ற இயக்குனர், நமது தேவகோட்டை நண்பர், திரை வசனக...