இடுகைகள்

‘கோமல்’ சுவாமிநாதன்;S.V.சஹஸ்ரநாமம்; லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 19; நாடகமே உலகம்

படம்
  அன்புச்   சொந்தங்களே .... துணை நகரங்கள்   ( satellite town) என்று இன்றைக்கு அழைக்கப்படும் அருகாமை புதிய முயற்சிகள் போல   தேவகோட்டையின் விரிவாக்கமாக அன்றே அமைந்த தனி இடம் தேவகோட்டை இராம் நகர்.   தேவகோட்டையின் விரிவாக்கம்.   தே   பிரித்தோ உயர் நிலைப் பள்ளி , கருவூலம் , நீதி மன்றங்கள் , பதிவுத்துறை அலுவலகம் என அமைதியாக ஆனால் அவசியமான பணிகள் நடை பெறும்   இடம்.    கொஞ்சம் உள்ளே சென்றால்   அந்தக் காலத்தில் தேவகோட்டையின் பெரும் செல்வந்தர்களுக்கு தனித்தனியாக ஆடம்பர பங்களாக்கள் அமைந்து இருந்த இடம் இராம் நகர்.    மிகப் பெரும் பங்களாக்கள்...விருந்தும்.. ' மருந்தும் '   விளையாடும் பெருந்தனக்காரர் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வைத்திருந்த பங்களா வீடுகள் , மலர்த் தோட்டங்கள்   .. என அழகு கொஞ்சி விளையாடிய இடம்.. இராம் நகரில் அமைந்து இருந்த நீதி மன்ற , மற்றும் ஆவணப்   பதிவு மற்றும்   ஆவணக் காப்பகங்களில் மனு அளிக்க வருபவர்கள் பெரும்பாலும் கையொப்பம் மட்டும் இடத்தெரிந்தவர்கள்.   கல்வி அறிவு இருப்பவர்கள் கூட ஆவணம் எழு...