அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 20 நூறு வயசு வரை வாழ நினைப்பவருக்கு யோசனை
காலம் கரைக்காத நிகழ்வுகளே இல்லை. சிலர் வாழ்ந்த காலத்தை ஒரு குறிப்பீடாக
இங்கே வைத்து விட்டுச் செல்கிறார்கள். அதனால் தான் மனிதர் மறைவினை 'காலம்
ஆகி விட்டார்' என்ற வாக்கியத்தில் குறிக்கிறோம்.
ஆயினும் அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே காலம் என்னும் கரையான் அரித்து விட இயலாத பெரு வாழ்வு
வாழ்கின்றனர். அப்படி 'காலத்தை
வென்றவர்... காவியம் ஆனவர்' மக்கள் மனதில் என்றும்
வாழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர்
நடித்த திரைப்படங்களில் அவருக்காக எழுதிய பாடல்களே அவரது வாழ்வினை என்றும்
காட்டும் வண்ணம் வாழ்ந்தவர். அவர் நடித்த 'என் அண்ணன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இந்த வரிகள் இடம் பெறும் .
நூறு வயசு வரை வாழ நினைப்பவருக்கு
யோசனை வைத்திருந்தால் சொல்லு சொல்லு....
நீ சொல்லு...சொல்லு...
சாமி .. தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால்
நூறு வயசுக்கு மேல் உண்டு
உண்டு...
ஒரு நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு
தனக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் படி இவர் வாழ்வை அமைத்துக்கொண்டாரா அல்லது
இவரது வாழ்வியலைப் பார்த்த
கவிஞர்கள் அப்படி எழுதினார்கள். இரண்டுமே நடந்த கதைகள். சரி.. மக்கள் திலகம் பற்றி
இப்போது ஏன் பேசுகிறேன் என்றால், அவர் எப்போதும் தனக்காக
நின்றவர்களை மறக்கவே இல்லை.. அத்துடன் அவர்களுக்கு தன்னால் என்ன செய்ய இயலும்
என்று அவர்களுக்காக சிந்தனை செய்தவர். அதனால் தான் அரசியல் சாயம் சிறிதும் தன மீது
படாத திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே 'பொன்
மனச்செம்மல்' என்று அழைத்தார்.
M G R ரசிகர் மன்றம்:
உண்மையில் எம்.ஜி.ஆருக்கு முழு அரசியல் வாதியாக மாற வேண்டும் என்ற எண்ணம்
அப்போது இருந்தது இல்லை. அவரது
ரசிகர் மன்றங்கள் மிகப் பெரும் அளவில் எங்கும் பரவி
இருந்தன. முதல் எம்ஜியார் ரசிகர் மன்றம் 1954 ஆம் ஆண்டு திரு.கல்யாண சுந்தரம் என்பவரால்
தொடங்கப்பட்டது.
அகில உலக எம்.ஜி.ஆர். ரசிக மன்றத்துக்கு தமிழத்தில் மட்டுமே 10,000 க்கும் மேற்பட்ட கிளைகள்
இருந்தன. கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,
செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தர ராசன், கோதண்ட ராமன் என்ற முசிறிப்
புத்தன் நம்ம தேவகோட்டையில் புரட்சி தம்பி என்ற ச .அங்குச்சாமி
என்று எத்தனையோ பேர் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற
நிர்வாகிகளாக இருந்து அதன் மூலம் அரசியல் வாழ்வு பெற்றவர்கள்
ஆமா... நம்ம தேவகோட்டை கதையைப் பற்றிப் பேச ஆரம்பித்து, சென்னையில்
ராமாவரம் தோட்டம் பக்கமாக காற்று திரும்பி விட்டது போலத் தெரிகிறதா? தேவகோட்டைத் தென்றல் ராமாவரம்
தோட்டத்தில் தவழ்ந்ததால் அது பற்றி பேசத்தானே
வேண்டும்? இப்போது அதே காலகட்டமான 1972 ~ 1976 வரையிலான தமிழக
நிலவரத்தைப் பார்த்து வருவோம்.
நம்ம தேவகோட்டையில், தி.ஊரணி மேல் கரையில் எம்.ஜி.ஆர்.படிப்பகம் மிக
நெடுங்காலமாக இயங்கிக் கொண்டு இருந்த்து.
இதைப் பற்றிய முழு விபரங்களை நமது முதல் பகுதியில் அத்தியாயம்11 இல் பகிர்ந்து
இருக்கிறோம். முதல் பகுதியினை
வாசிக்காதவர்கள், கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம்.
என்றும் பதினாறு எம்.ஜி.ஆர். அன்பர் குழு என்ற பெயரில் ரசிகர்கள் இணைந்து மன்றம் ஆரம்பித்தார்கள்.
இந்த அமைப்புக்கு மிக இன்றியமையாத காரண கர்த்தாக்கள்….
· திரு.எம்.இராஜேந்திரன், (பின்னர் இவர் கிராம நிர்வாக அதிகாரி ஆனவர்),
· திரு.SP.தனசேகரன், (வெகு காலம் தேவகோட்டை நகர அ.இ.அ.தி.மு.க. வின் நகரச் செயலாளர்), எனது மதிப்பிற்குரிய அன்பு அண்ணன். இவரை நகரச் செயலாளராக அ.தி.மு.க. ஆரம்பித்த காலத்தில், எமது பகுதி காந்தி ரோடில் இருக்கும் பசுமடத்தில் (6 ஆவது வார்டு நகராட்சிப் பள்ளி அருகில்) முதன் முதலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்ட்த்தில், ஜேப்பியார் அவர்கள் நியமனம் செய்த போது, சிறுவனாக நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்து இருந்த நினைவு, பசுமையாக இப்போதும் கண்ணில் விரிகிறது. இவருக்கு இணையாக அன்றைக்கு இந்தப் பதவிக்குப் பேசப் பட்டவர் எங்கள் வட்டாணம் ரோடு குளக்கால் பகுதியைச் சேர்ந்த M.S.K.சர்புதீன், மற்றும் மாமா ஆதி.ஜெயபாலன் அவர்கள். எத்தனையோ ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்த போதும், நகரின் நல்ல கண்ணுவாய் இன்று வரை தொடர்பவர் திரு.SP.தனசேகரன் அவர்கள்.
· · தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த பெட்டிக்கடை கருணாநிதி. முன்னர் பேருந்து நிலையத்துக்கு எதிரே,, தற்போது, பேருந்து நிலையத்தின் இடது புறமாக… நகருக்கு செய்தித்தாள் இவர்கள் கரங்களைக் கடந்து தான் வர வேண்டும்
· எங்கள் தி.ஊரணி வடக்கு அக்ரஹாரத்தில், வெங்கடேசன் என்று ஒரு பிராமண இளைஞர் இருந்தார். மணியாச்சி வாஞ்சி நாதன் போல மிகத் தீவிரமாய் களப்பணி ஆற்றியவர். கருதா ஊரணி, பூங்காவுக்கு சில அடிகள் முன்னதாக கண்ட தேவி ரோடில், மணி ஏஜென்சீஸ் என்ற ஒரு நிறுவனத்தில் இவர் பணி புரிந்தார். காலம் செய்த கோலம், இவர் ஏதோ சில குடும்பக் காரணங்களுக்காக தற்கொலை செய்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
· பாஸ்கரன் என்று ஒருவர். பின்னர் இவர் B.D.O. ஆகி விட்டார்.
· தி.மு.க. வில் இருந்த திரு.காளிதாஸ் அவர்களின் தம்பி, திரு.சுவாமி நாதன் அவர்கள்…
· அப்சரா ஆர்ட்ஸ் செல்லப்பன் அனைத்து விளம்பரப் படங்களையும் மிக அழகாக வரைந்து தனது பங்குக்கு இவர்களுடன்…
· காளி முத்து டீ மாஸ்டர்… இவர் சரஸ்வதி மற்றும் லட்சுமி திரையரங்கங்களின் கான்டீன் டீ மாஸ்டர்.
· கருதா ஊரணிப் பகுதியில் இருந்து ரைஸ் மில்லில் வேலை பார்த்த நீலமேகம்
· கருதா ஊரணி கார்மேகம்
· இதே பகுதியில் இருந்து சைக்கிள் கம்பெனி நட்த்தி வந்த திரு.மீனாட்சி சுந்தரம்.
இன்னும் பலம் இளம் காளையர் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப் பட்ட மன்றம் இது. மருத்துவர் வ.ராஜகோபால் அவர்கள் இவர்களுக்கு கௌரவ ஆலோசகர். இந்த மன்றத்தின் திறப்பு விழா அழைப்பிதழைப் பகிர்கிறேன். அன்றைய சட்ட மன்ற உறுப்பினர், பேராட்டுக்கோட்டை சண்முகம் அவ்ர்கள் திறப்பாளர். நகரத்தந்தை திரு.இராம. வெள்ளையன் எம்.ஜி.ஆர். படத் திறப்பாளர். 1972 ஆம் ஆண்டு, எம் ஜி ஆர் தி.மு.க.வை விட்டு விலக்கப்பட்டு விடுகிறார்,
க கவியரசர் கண்ணதாசன் அவர்கள் 1972 ஆம் ஆண்டு மக்கள் திலகம் தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின் தனது மனதினை இவ்வாறு பகிர்கிறார்:
19 1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல்
தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க
வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போது மே
எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய
ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை
விட்டுவிடக்கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு
அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்க
ள்.அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் .இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற் பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது.
ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும்,
லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத்
தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள்வரை,
அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.
கைவண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில்
ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1972 ஆம் வருடம் நவம்பர் மாதம்….நான் தே பிரித்தோ பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவன். அன்று நவம்பர் மாதம் 16 ஆம் தேதி.. நண்பர் தமிழ்க்கொண்டல் ஆ.குமார் என்னை விட ஒரு வகுப்பு மூத்தவர். பகல் உணவு இடைவேளைக்குப் பின், என்னிடம், முத்துமணி நேற்று அரசுப் பேருந்து முள்ளிக்குண்டு பகுதியில் எரிக்கப் பட்டுள்ளது… வா…. போய்ப் பார்த்து விட்டு வருவோம். இராம்நகர் தே பிரித்தோ பள்ளியில் இருந்து பேருந்து எரிக்கப்பட்டு கிடந்த இடம் நடக்கிற தூரம் தான். சென்று பார்த்தோம். அலுமினிய உடல் உருகி வெறும் இரும்புக் கூண்டாய் நின்றது எரிந்து கிடந்த பேருந்து. அதற்கு முந்தைய நாள் 15-11-1972 அன்று மக்கள் திலகம் தி.மு,க.வை விட்டு நீக்கியதைக் கண்டிக்கும் முகமாக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட்தாக 11 பேர் மீது வழக்கு. எந்த எம்.ஜி.ஆர் அன்பர் குழுவினை ஒரு ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒன்று கூடித் திறந்தார்களோ, அவர்களுக்குள் ஒரு குழு வழக்குத் தொடுக்கவும் இன்னொரு குழு வழக்கை மறுக்கவும் ஆக வேண்டிய சூழல் காலம் செய்த கோலம்.
இந்த வழக்கு 1973 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நடை பெற்றது.. வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்கள், வழக்கின் தீர்ப்பு விபரங்கள் வேண்டுமா?
இந்தக் கால கட்டத்தில் தான் நமது நீதியரசர் தி.நகரில் இருந்த மக்கள் திலகம் இல்லத்துக்கு தம் வழக்கறிஞர் நண்பர்களுடன் செல்கிறார்.
இரண்டு நிகழ்வுகளையும் அடுத்தடுத்துப் பார்ப்போம்..
கொஞ்சம் பொறுங்களேன்..
அருமையான நினைவுகூரல். விருப்பு வெறுப்பற்ற விவரிப்பு. அரிய தகவல்கள். அபாரமான நினைவாற்றல். நல்வாழ்த்து
பதிலளிநீக்குI left dvk when my schooling was over in 1958. I had touch with dvk till my college education in 63. Then by 65 I left TN on employment till 2002.
பதிலளிநீக்குNever was I an admirer of MGR as an actor or a politician