தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 28-இந்தோனேசியாவை இன்றும் வலம் வரும் தமிழ்/ இந்திய சொற்கள்

 

இந்தோனேசியாவை இன்றும் வலம் வரும் தமிழ்/ இந்திய சொற்கள்

 

வங்கக்கடலின் மறு கரையில் தமிழகத்தைத் தழுவிய கடல் அலை தாலாட்டும் வண்ணம் தூர கிழக்கில் அமைந்து இருக்கும் பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான தீவுக்கூட்டங்களில் தொகுதியே இன்றைக்கு இந்தோனேசியா என்ற ஒரு நாடாக உருப்பெற்று இருக்கிறது. பல்வேறு இன , மொழி,கலாச்சார மக்களை இணைத்து உருவான இந்த நாட்டில் இந்தோனேசிய மொழி (BAHASA INDONESIA ) என்ற ஒற்றை மொழியினை வைத்து அனைத்துத் தீவின் வேறுபட்ட மக்களையும் இணைத்துத் தாயாகித் தயாபரனாய் விளங்குகிறது


(A SHORT VERSION OF THIS ARTICLE PUBLISHED IN DHINA MALAR DAILY ON 12-02-26)

தீவுக்கூட்டம் முழுவதும் 700 வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கு இந்தோனேசிய மொழி தொடர்பு மொழியாக செயல்படுகிறது. அவரவர் தாய் மொழிக்கும் இணைப்பு மொழியான இந்தோனேசியா மொழிக்கும் இடையில் இருக்கும் தாக்கங்கள் காரணமாக அடிப்படியில் இந்தோனேசிய மொழி, மலாய் மொழி என்ற போதிலும், புருனே, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் மலாய் மொழியின் வடிவத்திலிருந்து பல அம்சங்களில் வேறுபடுகிறது.

இந்தோனேசிய மொழி, சமஸ்கிருதம், தமிழ், சீனம், ஜப்பானியம், அரபு, ஹீப்ரு, பாரசீகம், போர்த்துகீசியம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் மற்றும் பிற ஆஸ்ட்ரோனேசிய மொழிகளிலிருந்து பல சொற்களைக் கடன் வாங்கியுள்ளது.


அதே வேளையில் வேறுபட்ட கால கட்டத்தில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகளின் காரணமாகவும், பூகோள, வணிகக் காரணிகளாலும், உலகத்தின் பல்வேறு இன மக்களும் இந்த மண்ணில் காலூன்றி இருந்த காரணத்தால் அந்த நாட்டவரின் மொழி எச்சங்களையும் ஏற்றுக்கொண்டு தனதாக்கி வைத்துக் கொண்டு இருக்கிறது. பல மொழிகளின் சொல்லாடல்கள்/ சொற்கள் அந்தந்த நாடுகளின் நாற்றங்காலில் இருந்து எடுத்து நடப்பட்ட வயல் வெளிக்களாக இந்தோனேசியா மொழி திகழ்வதால், அவை இந்தோனேசியா மொழியாகவே வேர்பிடித்து முளைத்துத் தழைத்து நிற்கிறது.

வேர்களைக் காணும் வேளை மட்டுமே வெளியில் இருந்து கடன் வாங்கி வந்தவை என்று தெரிகிறது. அந்த வகையில் தமிழக / இந்திய மொழிகளின் பல்வேறு சொற்களும் நமது நூற்றாண்டு கால வணிகர்கள், அரசர்கள், மாலுமிகள், கடற்படை வீரர்கள் மதங்கள் பரப்பிய மாதவர்கள் இவர்களுடன் கடல் கடந்து பயணம் செய்து இங்கே ஊர் மாறி, கொஞ்சம் பேர் மாறி ஆயின் வேர் மட்டும் மாறாது இளமையோடு தம்மை அடையாளம் காட்டுகின்றன.

 

அப்படி நாடு கடந்தும் தம் வீடு நினைவாய் வாழும் சில தமிழ்/ இந்திய சொற்களை உங்களுக்கு காட்சிப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்தியாவில் இருந்து ஆரம்பகால இந்து மற்றும் பௌத்த செல்வாக்கு இந்தோனேசிய மொழியில் பல சமஸ்கிருத சொற்களுக்கு வழிவகுத்தது (குறிப்பாக ஜாவானிய செல்வாக்கின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது). இந்திய வணிகர்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் தொடர்பான மொழிகளிலும் சொற்களை பங்களித்திருக்கலாம். 


நான்கு பெரிய மொழி அலைகள் இந்தோனேசியாவில் கரைகளில் தமிழ் மொழியின் தாக்கத்தைச் சேர்த்தன.

1.ஆரம்பகால கடல்சார் வர்த்தகம் (கிமு 1000 - கிபி 500)

எந்த ஒரு அந்நிய தேசத்தினரும் கால் பதிக்காத இந்தக் கால கட்டத்திலேயே தமிழகத்தில் இருந்து பல்லவர், பாண்டியர் மாற்று சேரர் தங்கள் மரக் கலங்களை இன்றைய இந்தோனேசியா என்று அழைக்கப்படும் தீவுகளின் கரைகளில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி இருந்தனர்.

·         நாகப்பட்டினம்ஆச்சே

·         காவேரிப்பட்டினம்பாருஸ்

·         பூம்புகார்பாலேம்பாங்

·         காயல்கெடாஜாவா

தமிழ் வணிகர்கள் கொண்டு வந்தவை: பருத்தி, ஜவுளி, மணிகள், உலோகப் பொருட்கள், யானைகள், மசாலாப் பொருட்கள். இந்தோனேசியர்கள் தமிழ் வணிகச் சொற்களைத் தத்தெடுத்துத் தாமதாக்கிக் கொண்டனர்.

🏛 2) பல்லவதமிழ் எழுத்துமுறை செல்வாக்கு (கிபி 4–8 ஆம் நூற்றாண்டு)

இந்தோனேசியாவின் ஆரம்பகால (ஸ்ரீவிஜயகுத்தை, தருமநகாரா / Śrivijaya, Kutai, Tarumanagara) கல்வெட்டுகள் அனைத்துமே பல்லவ கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன - இது ஒரு தமிழ்-சமஸ்கிருத எழுத்து. இந்த எழுத்துமுறை இங்கெல்லாம் பரவியது :

·         சுமத்ரா

·         ஜாவா

·         பாலி

·         கம்போடியா

·         தாய்லாந்து

·         பிலிப்பைன்ஸ்

இதன் மூலம், தமிழ் ஒலிப்பு முறை மற்றும் தமிழ்ச் சொற்கள் பலவும் மலாய்/பழைய ஜாவானிய மொழியில் நுழைந்தது.

🛕 3) சோழர்-ஸ்ரீவிஜய சகாப்தம் (10-13 ஆம் நூற்றாண்டு) 

இந்தோனேசிய மண்ணில் தமிழர்களின் வர்த்தகம், தமிழ் வணிகர் குழுக்களின் குடியிருப்புகள் (அய்யாவோல் 500, மணிகிராமம்), கோவில் கட்டுதல், நாணயம் நிர்வாகம் ஆகியவை ராஜேந்திர சோழனின் கடாரம் (கெடா) மற்றும் ஸ்ரீவிஜயா (சுமத்ரா + மலாய் தீபகற்பம்) ஆகிய இடங்களின் மீதான கடற்படைப் முற்றுகைக்குப் பிறகு வலுப்பெற்றது. தமிழ் வர்த்தகக் குழுக்கள் பாரஸ் பாலேம்பாங் ஜம்பி கெடா மலாக்கா ஆச்சே 

ஆகிய இடங்களில் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்து அங்கேயும் தாயகத்துக்குமாக கப்பல்களில் உலவிக்கொண்டு இருந்தனர். வர்த்தகம், நிர்வாகம், கைவினை, விவசாயம் போன்ற துறைகளில் பஹாசா இந்தோனேஷியா தமிழ் வார்த்தைகளை உள்வாங்கியது  


இந்தோனேசிய மொழியில் இன்றும் பயன் பாட்டில் இருக்கும் சில தமிழ் மூல வார்த்தைகளை இங்கே பட்டியல் இட்டு இருக்கிறேன். தினமும் வேர்ச் சொற்களை ஆழ்ந்து ஆயும் வேளை, நிறைய புதிய வார்த்தைகள் கிடைக்கின்றன. எனவே இந்தப்பட்டியல் நீளும். காலம் கை கொடுத்தால் ஒரு இந்தோனேசியா -தமிழ்/ இந்திய வார்த்தைகளின் அகராதியை அமைத்து விட முடியும்.  உங்கள் வாழ்த்துகளாலும் தமிழ் அன்னையின் ஆசிகளாலும் அது நிறைவேறும்.

இதோ பட்டியல் ..

.எண்

BAHSA INDO

தமிழில்

 

MEANING

1

2

ACARAM

அச்சாரம்

3

ACU

அச்சு

4

ANDAI

அண்டை (அருகாமை )

5

APAM

அப்பம்

6

ARTI

அர்த்தம்

7

AYAH

அய்யா

8

BADAI

வாடை (காற்று )

9

BAGAI

வகை

10

BAGI

பகு

11

BAJI

வாச்சி - கூர்மை

12

BATIL

வட்டில்

13

BEDI

வெடி

14

BENDA

பண்டம்

15

BENDAHARA

பண்டாரம்

16

BICU

வீச்சு

17

CANAI

சாணை

18

CEMETI

சம்மட்டி

19

CEREPELAI

கீரிப்பிள்ளை

20

CERPU

செருப்பு

21

CERUTU/ SERUTU


சுருட்டு

22

CETI

செட்டி

23

CUKAI

சுங்கம்

24

CUKU

சுக்கு

25

CUMA

சும்மா

26

GUNDU

குண்டு

27

GURINDAM

கிரந்தம்

28

HELAI

இலை

29

JODOH

சோடி

30

JOLI

டோலி

31

KAMBI

கம்பி

32

KAPAL

கப்பல்

33

KARI; KARE

கறி

34

KADAI/KEDAI

கடை

35

KATELUM

கொத்தளம்

36

KATI

கட்டி

37

KATIK

கட்டை

38

KATIL

கட்டில்

39

KAWAL

காவல்

40

NGAWALகாவல்

41

KEDELAI

கடலை

42

KALEDAI

கழுதை

43

KETUMBAR

கொத்தமல்லி

44

KODI

கோடி

45

KOLAM

குளம்

46

KONDE; KUNDAI

கொண்டை

47

KORUNDUM

குருந்தம்

48

KUDAI

கூடை

49

KUIL

கோயில்

50

KULAI

குலை

to untie, loosen, dishevel

51

KULI

கூலி

52

KUNDI

குன்றி மணி என்பதே குண்டி ஆனது

53

KALASAN

கலசம்

54

KATA

சொல்லுங்கள்/கதையுங்கள்

55

KAWI

கவி

56

KECIL

கிச்சிலி (சிறிய ரக)- (சம்பா)

57

KUMBUL

கும்பல்

58

LADAM

லாடம்

59

LEBAI

லப்பை

60

LOGAM

உலோகம்

61

MADALI

மத்தளம்

a kind of drum

62

MALAI

மாலை

anything strung together

63

MALIGAI

மாளிகை

top floor of a storied building

64

MANGGA

மாங்காய்

mango

65

MANIK

மணி

66

MANIKAM

மாணிக்கம்

gem, precious stone

67

MARU

மாற்று

to change, alter

68

MATU

மாற்று

degree of fineness of gold or silver

69

MEMPELAM

மாம்பழம்

mango fruit

70

MERUNGGAI

முருங்கை

Moringa

71

METAI

மெத்தை

bed, cushion

72

METERAI

முத்திரை

1. impress, mark, Seal, Stamp etc.,

73

MISAI

மீசை

moustache

74

MODAL

முதல்/ முதலீடு

 principal, fund, capital, money yielding interest

75

MUNDAM

முந்தை

small vessel

76

MUTU

முட்டு

difficulty, as in passing,

77

MABUK

மயக்கம்

78

MADU

மது ( தேன் )

79

MANGA

வாங்க! வாங்க!

80

MASA

மாதம் /மாசம்

81

MEMPELAI

மாப்பிள்ளை

82

MENDOPO/PENDOPO

மண்டபம்

MANDAPA

83

MUKA

முகம்

84

MULA

மூலம்

85

MYNA

மைனா

BIRD

86

NAGA

நாகம்

87

NALI

நாழி

88

NELAYAN

வலைஞன்

89

NILA

நீல

90

NILAI

நிலை

91

NILAKANDI

நீலகண்டன்

92

NILAM

நீலம்

93

ONDE -ONDE

உண்டை

ball, globe,

94

PANAI

பானை

1. large earthen pot or vessel/2.measaure of capacity. 3. Oil measure. 4.Cembu

95

PANCALOGAM

பஞ்சலோகம்

1. The five kinds of metal, poṉ, irumpu, cempu, īyam, veḷḷi;

96

PANDAM

பண்டம்

1. substance, material, utensils.

97

PANDU

பந்து

relation, kinsman

98

PATAM; PETAM

பந்து

plate of gold worn on the forehead, as an ornament or badge of distinction

99

PAWAI

பவனி

parade

100

PELBAGAI

1. பல, 2 வகை

1. many

101

PERISAI

பரிசை

2. large umbrella, as a badge of honour

102

PERLI

புரளி

1. Lying, falsehood;

103

PETI

பெட்டி

chest, trunk, coffer, box

104

PITAM

பித்தம்

lunacy, madness

105

PUADAI

பாவாடை

PUDAVAI

106

PUALAM

பவளம்

red coral

107

PUDI

பொடி

small gem

108

PUTU

புட்டு

Puttu

 

கருத்துகள்

  1. ஐயா உங்கள் கட்டுரை அருமை. என்னைப் போன்ற இந்தோனேஷியாவில் வசிக்கும் பலருக்கும் உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டங்கள் எமக்கு ஊக்க மருந்து. நன்றி உறவே

      நீக்கு
  2. அருமையான கருத்தாக்கம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.🌹🌹

    பதிலளிநீக்கு
  3. எத்துணைப் பெரும்பணி அய்யா இது. எண்ணித் துணிகக் கருமம் என்பதை மிக உண்மையாகக் கடைபிடித்து இருக்கிறீர்கள்.இந்தப் படைப்புக்காக நேரங்காலம் பார்க்காமல் நீங்கள் உழைத்துள்ளதை இதைப் படிப்பதன் வாயிலாக அறிய முடிகிறது. வணங்குகிறேன் அய்யா.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சிறப்பான அருமையான பதிவு
    தமிழர்கள் பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..