அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 24

மறந்தே போச்சு ... ரொம்ப நாள் ஆச்சு ... அசை போடும் தேவகோட்டை நினைவுகள் - பாகம் 2: பகுதி : 24 மறந்தே போச்சு ... ரொம்ப நாள் ஆச்சு ... மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி ... என்று ஒரு படப் பாடல் .. 1974 ஆம் ஆண்டு வெளி வந்த ' அத்தையா .. மாமியா ' என்ற திரைப்படத்தில் . அந்தப் பாடல் தான் இதை 8 மாத இடை வெளிக்குப் பின் எழுத முயற்சிக்கும் பொது நினைவுக்கு வருகிறது . என்ன பண்றதுங்க .. இடைவிடாத அலுவலகப் பணி எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறது . கடைசியில் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் இல்லம் அருகில் உலாவினோம் ... சப்பாணி முனீஸ்வரரை தரிசித்தோம் . இந்த தெருவில் இருந்து சிலம்பணி சன்னதி தெருவுக்கு ஒரு சிறிய சந்து பிரியும் . ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில் இருந்த ஒரு வீட்டில் , கணவர் மனைவி மீது சந்தேகம் கொண்டு மனைவியைத் தீர்த்துக் கட்டி விட்டார் . தடுக்க வந்த 2 பெண் மக்களும் பலியானார்கள் . ஆண் என்றால் குட...