எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-8. அருளா மருளா

அருளா ? மருளா ? ஆடி மாதம் என்றாலே நம்ம ஊரில் ஆடும் மாதம் தான் . ஒவ்வொரு தெருவிலும் அம்மன் கோவிலில் காப்புக் கட்டுவதில் ஆரம்பித்து கரகம் எடுப்பது , பூக்குழி இறங்குவது , அலகு குத்திக் கொள்வது என்று அனைவரும் ' ஆடி ' க் களிக்கும் மாதம் ஆடி மாதம் . எனது பூர்வ புண்ணிய நகரம் தேவகோட்டை. ஆடி என்றாலே அம்மனின் விழாக்களால் சும்மா ' அதிரும் '. கல்லூரிக் காலம் , தேவகோட்டை அழகாபுரி நகரின் மூன்று வீதிகளும் , தெற்குதெரு , வடக்குத்தெரு , நடுத்தெரு என்று போட்டி போட்டு வைபவம் . தினமும் இரவு சாமி ஆட்டம் தான் . தெற்குத் தெருவில் நண்பர் பழனிச்சாமியும் வடக்குத்தெருவில் நண்பர் நாகராஜூவும் உடன்பிறவா சகோதரர்கள் . வடக்குத் தெருவில் ' கொட்டுச் சத்தம் ’ …. ( மேளச்சத்தம் ) கேட்டு விட்டால் போதும் .. நகராஜுவின் அண்ணன் மணி சாமி ஆட ஆரம்பித்து விடுவார் . ஆஜானு பாகுவான தேகம் , வாலிபப் பருவம் , நல்ல உடல் எடை ... மணி சாமி வந்து குதிக்க ஆரம்பித்தால் , யாராவது பின்னல்...