அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 52

அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி பகுதி : 52 24-04-2018 அன்புசொந்தங்களே .... உறவாடும் பொது மனதுக்குள் எத்தனை மகிழ்ச்சி !. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ? என்று சொல்வார்கள் . நாமெல்லாம் ஒரே இடத்தில் பிறந்து வளர்ந்து , கால வேள்ளத்தில் எங்கெங்கோ அடித்து செல்லப்பட்ட போதிலும் , பிறந்த , வளர்ந்த நினைவுகள் அடி மனதில் தாங்கிப் போய் அமிழ்ந்து இருக்கிறது . தற்போது ஒருவரை ஒருவர் மீண்டும் கண்டு கொள்கின்ற வேளையில் , காலம் எவ்வளவு வேகமானது என்று உணர முடிகிறது . இந்த புனர் ஜென்மம் என்று சொல்றங்களே .. அந்த நம்பிக்கையின் அடிப்படியில் ..... , நம்புவோம் என்று வைத்துக் கொண்டால் . மீண்டும் மீண்டும் பிறக்கும் இந்த உயிர் இனங்கள் முந்தைய பிறப்பின் நினைவுகளை ' மாயை ' யின் காரணத்தால் அறிவதில்லை . ஆயினும் ஏதோ ஒரு உறவின் உணர்வு ஆட்டிப்படைக்கும்...