அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 32
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 32
12-12-2017
ஒரு நாள்
அல்லது கொஞ்சம் விடுப்பு விட்டு விட்டோம் என்றால் திரும்ப அதை
முறைப்படுத்துவது கொஞ்சம் கடினமே.. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, கோவிலுக்கு விடாமல் செல்வது எல்லாமே ஒரு
சிறிய இடை
வெளி விழுந்து கொஞ்சம் அதிக
இடைவெளியாக ஆகி விட்டால் திரும்ப முறைப்படுத்துவது கொஞ்சம் கடினமான காரியம் தான்.
அதனால் தான் இவற்றுக்கு Discipline முக்கியம் ஆகும். இந்த தொடரின் கதியும் அப்படிதான் ஆகி
விட்டது.
கண்ட தேவி
சாலையில் பயணம் செய்தோம் சிவன் கோவில் முக்குக்கடையில் இருந்து...அப்படியே திரும்ப அந்த
முக்குக் கடைக்கே வந்து விடுவோம். ஏனெனில் சிவன் கோவில் பகுதியில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் மனிதர்கள் நிறைய மீதம் இருக்கின்றது . சிவன் கோவில் மேற்கு முன்பே பார்த்து விட்டோம். சிவன் கோவிலின் முன்
பக்கத்து திடலுக்கு ( ஊரணிக்கும், கோவிலுக்கும் இடையில்) தீபாவளி நேரம், கந்தர் சட்டி விழா
நடந்த சமயம் பார்த்து விட்டோம். அந்த கோவிலின் எதிரில் உள்ள
மேற்கு படித்துறை மிக
நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கும். இரண்டு புறமும் கடைசிப் படியில் கருங்கல்லில் வடிக்கப்பட்டு இருக்கும் அழகு
யானைகள் கம்பீரம் காட்டும். கோவிலுக்கு எதிரில் இடது
புறம் படித்துறையில் அருமையான விநாயகர் ஆலயம். அந்த
ஆலயத்தின் வாயில் மேல்புறம் அமைந்து இருக்கும் அழகான சுதை
வேலைகள்...கணங்கள் பலா
முதலான பெரிய பழங்களுடன் விநாயகருக்கு படைக்க நிற்கின்ற கோலம்.. அருமையான வண்னணக்கோலத்தில்.... இந்த கோவிலை ஒட்டிய பின்புறம் ஒரு
கட்டிடம். பல காலம் நியாய விலைக்கடையாக இருந்தது. முன்பு கந்தன் விழா
நடக்கும் காலங்களில் ஒப்பனை கலைஞர்கள் அந்த
இடத்தில் இருந்து சிகை
அலங்காரம் செய்ததை வேடிக்கை பார்த்து இருக்கிறேன்.
அதை ஒட்டி ஒரு
தண்ணீர் பந்தல் இருக்கும். அந்த தண்ணீர் பந்தல் ஆரம்பிக்கும் இடத்தில் உ.ராம.சேவு.
அவர்கள் விலாசம் பொறித்த சுமை
தாங்கி கல் இருக்கும். அந்தக் காலத்தில் மகப்பேறு காலத்தில் வயிற்று சுமையோடு இறந்தவர்களின் நினைவாக சுமை
தாங்கிகள் அமைப்பது தமிழர் வழக்கம் . சுமை தாங்கி கல்
பற்றிய கீழ்கண்ட 'தி
இந்து' பத்திரிகையின் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
தமிழர்களின் அறத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கும் சுமைதாங்கி கற்கள் சிவகங்கை மாவட்டத்தில் சாலையெங்கும் அதிகமாகத் தென்படுவது தொண்டாற்றல் நிறைந்தவர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சுமைதாங்கி கல் என்பது பண்டைய தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகும். சுமைகளை சுமந்து செல்வோர் அதனை பிறர் துணையின்றி எளிதாக இறக்கி மீண்டும் தூக்கிக்கொள்வதற்காக கட்டப்பட்ட அமைப்பு. முந்தைய காலங்களில் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளவர் மட்டும் விலங்குகளின் துணையோடு வாகனங்களை பயன்படுத்தினர். மற்றவர்கள் தோளிலும், தலையிலும் சுமை களுடன் சுமந்து சென்றனர். சுமையுடன் சென்றவர்களுக்கு உதவிடும் வகையில் அன்றைய ஆட்சியாளர்களும், தொண்டாற்ற நினைத்தவர்களும் நீர்நிலைகள் உள்ள சாலையோர மரத்தடிகளில் சுமைதாங்கி கற்களை நட்டு மகிழ்ந்தனர்
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தஞ்சை தொல்லியல் கழக உறுப்பினருமான உ.விஜயராமு கள ஆய்வு செய்ததில் கூறியது: ரோமின் மத்தியதரை கடல்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளரால் கண்டு பிடிக்கப்பட்டதே உலகின் மிகப் பழமையான சுமைதாங்கி கல்லாக (10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு) கருதப்படுகிறது.
பண்டைய காலங்களில் ஆட்சியாளர்கள் விவசாயப் பயன்பாட்டிற்காக நீர்நிலைகளை உருவாக்கினர். பயணத்திற்காக சாலை வசதி செய்தும் சாலையோரங்களில் மரங்கள் நட்டனர். பயணிகள் தங்கிச் செல்ல சத்திரங்களை கட்டினர். அசோக மன்னர் சாலையெங்கும் மரங்களை நட்டு வைத்தார், ராணி மங்கம்மாளும் மரங்கள் நட்டு சத்திரங்கள் பல கட்டிக் கொடுத்தார். இவ்வாறே சுமையுடன் செல்லும் பயணியின் சிரமத்தை போக்க சுமைதாங்கி கற்களை அமைத்துக்கொடுத்தனர்.
தன்னை அடையாளப்படுத்த அக்கற்களில் பெயர்களை பதித்து வைத்தனர். மனிதருக்கு மட்டுமின்றி தண்ணீர் குடித்த மாடுகள் தன் சுனைப்பை தவிர்க்கவும் இக்கல் பயன்பட்டுள்ளது. இவை ஆவுரோஞ்சி கல் எனப்பட்டது. இறப்பு எய்திய கர்ப்பிணிப் பெண்களின் நினைவாகவும் சுமைதாங்கி கற்களை நட்டு வைத்தனர். இன்றளவும் பலர் இக்கற்களுக்கு மாலையிட்டு வழிபாடு செய்கின்றனர்.
காலமாற்றத்தால் காணாமல் போன அடையாளங்களில் சுமை தாங்கி கற்களும் ஒன்றாகி விட்டது. பழமைக்கு சாட்சியாகத் திகழும் சுமைதாங்கி கற்களை பாதுகாப்பது நமது கடமை என்றார்.
இந்த சுமை
தாங்கி கல்லுக்கு அடுத்து வலது
புறம் திரும்பினால் சிவன் கோவில் வடக்கு தெரு.
எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழன் அன்பு நண்பனும் , தேவகோட்டை ஸ்ரீ
சேவுகன் அண்ணாமலை கல்லூரி நிறுவுனர் திரு.சேவு.அண்ணாமலை செட்டியார் அவர்களின் அண்ணன் திரு.சேவு.பஞ்சநாதன் செட்டியார் அவர்களின் புதல்வனும் ஆன
திரு.தண்ணீர் மலை
அவர்களின் இல்லம். நாங்கள் தே பிரித்தோ பள்ளியில் இருந்து வகுப்பு தோழர்கள். எந்த
பாகுபாடும் பார்க்காமல் எந்தன் குடிசை தேடி
வந்த கோமான். பள்ளி நாட்களில் இங்கு தான்
பாதிப் பொழுது ... நண்பன் சோமசுந்தரம் அறிவார்.
சிவன் கோவில் வடக்கு தெருவில் திரும்பாமல் நேராக சென்றோம் என்றால் சு.சுப. தெரு. இந்த
தெருவில் ஒரு
வீட்டில் நாகலிங்க மலர்கள் பூத்து தரையில் கொட்டி கிடக்கும்.அந்த
வீட்டில் தண்ணீர் இலவசமாக பொது
மக்களுக்கு குழாயில் பிடித்து கொள்ள வழங்குவார்கள். தேவகோட்டை உண்மையில் தரும
பூமி. தருமியர் பலரும் கருமியர் பலரும் தர்மத்தால் வாழ்ந்த பூமி. சிவன் கோவில் கரையில் தண்ணீர் பந்தல்.... திண்ணன் செட்டி ஊரணி
மேல்கரையில் தண்ணீர் பந்தல்.. கருதா ஊரணி
கண்டதேவி ரோடில் தண்ணீர் பந்தல். குதிரைப்பதை ரோடில் , சொர்ணவல்லி பங்களாவுக்கு அடுத்து இருந்த திருநாவுக்கரசு செட்டியார் வீட்டில் மின்சார மோட்டார் போட்டு தண்ணீர் மேல்
நிலைத்தொட்டிக்கு ஏற்றப்பட்டு, குழாயில் பொது
மக்கள் தண்ணீர் பிடித்து கொள்ள வசதி
செய்து கொடுத்து இருந்தார்கள். கடுமையான தண்ணீர் பஞ்சம் இருந்த காலம் அது...
தண்ணீர் தர்மம் என்று நினைத்த காலம். பாவம் அவர்களுக்கு பாக்கெட்டிலும், பாட்டிலிலும் தண்ணீர் அடைத்து பிற்காலத்தில் விற்கப்பட்டு முதலாளிகள் பணம்
பண்ணுவார்கள் என்று தெரியாது.
இந்த S.SP. தெருவுக்கு இணையாக புட்டுக்கடை தெருவும் நீண்டு கருதா ஊரணி
பிள்ளையார் கோவில் வீதியில் போய்
நிறுத்தும். சிவன் கோவில் வடக்கு தெருவில் தொடர்ந்து கிழக்கு நோக்கி நடந்தால் சிவன் கோவில் குளக்கால் தெரு. இந்த
தெருவில் திரு.தண்ணீர் மலை
அவர்களுக்கு புதிய மாடலில் மொசைக் தரையுடன் கட்டப்பட்ட புதிய வீடும் உண்டு. இங்கு தான்
TWO
IN ONE அறிமுகம்
ஆன 1975 ஆண்டு வாக்கில், பாடல்கள் பதிவதும், மைக்கில் பேசி
குரலை பதிவு செய்வதும், R M S சவுண்ட் சர்வீஸில் இசைத்தட்டில் இருக்கின்ற பாடல்களை casset ல் பதிவதுமாக பரீட்சைகள் பல சவுண்ட் என்ஜினீயர் ரேஞ்சில் விளையாட்டு தனமாய் செய்து மகிழ்ந்து இருக்கிறோம்.
இந்த வீடு
தாண்டி இன்னும் உள்ளே சென்றால் திரு
வேங்கடமுடையான் பள்ளியில் இருந்து தே பிரித்தோ பள்ளி வரை என்னுடன் படித்த நண்பர் சாத்தப்பன் அவர்கள் வீடு. அருமையான திறமையான வகுப்பு தோழன். திருவேங்கடமுடையான் பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பார். எனக்கு போட்டி போட
தோன்றும். இருவரும் S .S .L .C . எனப்படும் பள்ளியிறுதி தேர்வுகளின் பொதுப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஓன்றாக அமர்ந்து படித்து இருக்கிறோம். இடையில் அவர்
வீட்டில் மாங்காய் பறித்து சாப்பிடுவோம். 1975 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரை
நான் பார்க்கவே இயலவில்லை. முக நூலில் நமது
பகுதியில் இருந்து சாத்தப்பன் என்ற
பெயரில் யாரவது வந்தால் உடனே
ஆர்வத்துடன் 'நீங்கள் தேவகோட்டையா ?' என்று வினவி இல்லை என்ற
பதிலில் ஏமாந்து இருக்கிறேன்.
இதைபடிக்கும் நண்பர்கள், தயவு செய்து தெரிந்து இருந்தால் அறியத்தரவும்.
அடுத்து சிவன் கோவில் கிழக்கு, சிவன் கோவில் இறக்கம் மற்றும் சிவன் கோவில் தெற்கு அடுத்த பகுதியில் பார்ப்போமா ....
Mani Mani Yana ninaivugal .... Simply superb quality writing.... some people will have good memories...and few will be able to write well ....you are blessed with both...salute to your ability to write so well..It is time you be a full time writer.... enjoyed reading 😍
பதிலளிநீக்குThank you Ramesh. Would request to share to both Vasan and Ingersoll. After you informed only the idea of putting all the episodes in one link had arised, Thhank you. Still the balance episodes are to be uploaded. Slowly doing.
நீக்குSORRY THIS EVENING I WAS NOTABLE TO CONTINUE MY CONVERSATIKON WITH YOU SINCE THERE WAS A GUEST. BEAR WITH ME DEAR FRIEND.
சுமைதாங்கி கல் வேறு, ஆவுரோஞ்சி கல் வேறு. ஆவுரோஞ்சி கல் என்பது நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் அரைத் தூண் அளவில் நிறுத்தி வைக்கப்படும் கல் ஆகும். நீர் அருந்தும் பசுக்கள் உடலைத் தேய்த்துக் கொள்வதற்காக இவைகள் நிறுவப்பட்டன.
பதிலளிநீக்கு