இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 58

படம்
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 31-05-2018 பகுதி:   58 எப்போது எல்லாம் நெருங்கி வர நினைக்கிறோமோ அப்போது தான் அதிகமான வேலைப்பளு நமக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.   காலத்துடன் போராடி அதன் கட்டுக்களை மீறி உங்களைக் காண வரும் காதல் கன்னிப்பெண்ணின் மன நிலைதான் எனக்கு, இந்தத் தொடர் மூலம் உங்களைச் சந்திப்பது.   அப்பவும்,   சொல்லில் வருவது பாதி…. நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி…. எனும் மன நிலைதான்.   அவசரத்தில் எத்தனையோ செய்திகளைச் சொல்ல வந்து, மறந்து பின்னர் நினைத்தவை பல..   உதாரணத்துக்கு, சென்ற பகுதியில், பேருந்துகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும்போது, மனதில் நினைத்து இருந்த ஸ்டேட் பஸ் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.   சிவப்பு வண்ணத்தில் மாவட்டங்களை கடந்து செல்லும் மாநில அரசின் பேருந்துகள், ஸ்டேட் பஸ் என்று அழைக்கப்படும்.   விரைவு வண்டிகள்.   அப்போது மண்டபம் to கிருஷ்ணகிரி க்கு ஒரு ஸ்டேட் பஸ் நமது வட்டாணம் ரோடு வழியாகச் செல்லும். அந்தக் காலத்தில் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, பேருந்...

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 57

படம்
அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 2 1-05-2018 பகுதி :  57 எனக்கும் என் அன்பு சொந்தங்களின் மனப்பாங்கு போலவே ,   பழைய வரலாற்று நினைவுகளை அறிந்து கொள்வதில் மிகுந்த விருப்பம் .   அதிலும் நமது நகரான தேவகோட்டையில் பேருந்து நிலையத்தின் பழங்கால சுவடுகளை நினைவுகளாக்கி    நமது சொந்தங்களுடன் பகிரும் பொது ஏற்படும் மன மகிழ்வுக்குப் பஞ்சமே இல்லை ,   வானமே எல்லை ... ஒரு நகரில் பேருந்துகள் வந்து போகின்றன என்றால் ,  அந்த ஊருக்கு மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்க வேண்டும் என்று பொருள் சரிதானே ?   பேருந்து இயக்கம் தொழில் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது நமக்குத் தெரியும் .   தொழில் நுட்ப ( TECHNICAL)  அறிவும் வேண்டும் , பொருளாதார செறிவும் (  ECONOMIC STRENGTH )  ம் வேண்டும் ,   வணிகமும் ( COMMERCE )  அறிந்து இருக்க வேண்டும் . ஒரு   70, 80  வருடங்களுக்கு முன்பே  ...