அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 61

அசை போடும் .. தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 13-08-2018 பகுதி : 61 சென்ற பகுதியில் , இந்திய விடுதலைப் போர் இயக்கத்தில் நமது தேவகோட்டையில் களம் கண்ட விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம். இந்த பகுதி எண் 60 கொஞ்சம் நீண்டதாகத்தான் அமைந்து விட்டது. எவ்வளவோ எத்தனித்தும் குறைக்க இயலவில்லை. ஏனெனில் அந்தப் பகுதியில் என்னுடைய எழுத்துக்களை விடவும் பெருந்தலைவர்களாய் விளங்கிய திரு.சின்ன.அண்ணாமலை , மற்றும் தோழர் கே.டி.கே. தங்கமணி இவர்களின் வாய் மொழியினை அப்படியே பதிவிறக்கம் செய்து இருந்தேன். அவர்களின் அமுத மொழிகளை அப்படியே பருக கொடுக்காமல் அவற்றில் கை வைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது ? இருந்த போதிலும் , எப்போதும் போல் ரசித்து சுவைத்து பின்னூட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்திய அன்பு இதயங்களுக்கு நன்றி . நமது நகரின் மணி மகுடமாக விளங்க வேண்டிய தியாகிகள் பூங்கா தற்போது இருக்கும் நிலையை விட்டு உயர்த்தி அதன் உண்மையான பாரம்பரியம் மிக்க அருமை பெருமைகளை உலகுக்கு அறியும் வண்ணம் ...