அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 68

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 17-11-2018 பகுதி: 68 அன்புசொந்தங்களே ... என்ன... தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறீர்களா? காத்துக் கிடப்பதில் இன்பமுண்டு... காக்க வைப்பதில் சுகமுண்டு ..... அதற்கு முன்னர் ஒரு செய்தி... நல்ல நாள் பார்த்து திருமணம் செய்வது என்பது நமது அனைவரின் வழக்கு. நகரத்தார் திருமண முறை மிகவும் பழமை மாறாமல் அந்தந்த கோவில்களில் இருந்து மலர் மாலை கொண்டு வரப்பட்டு நடத்தப பெறுவது. சில சம்பிரதாயங்களும் சடங்குகளும் நகரத்தாருக்கு மட்டுமே உரித்தானவை. அதிலும், மேல் வட்டகை , கீழ் வட்டகை , தெற்கு வட்டகை என்று பூகோள ரீதியாக ஊர்கள் பிரிக்கப்பட்டு திருப்பூட்டு முறைகளே வேறுபாடும். கீழே கண்ட சில சடங்குகளும், சீர் முறைகளும் நகரத்தாருக்கே உரித்தானவை. முக்கியமானவற்றை மட்டும் கொடுத்து இருக்கிறேன். பேசி முடித்து சிட்டை எழுதிக்கொள்ளுதல் முகூர்த்தத்துக்கு நாள் குறித்தல் முகூர்த்தக்கால் ஊன்றுதல் சுவாமிகளுக்கு பணம் முடித்தல் கோவிலு...