இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 69

படம்
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 20-12-2018 பகுதி: 69 அன்புசொந்தங்களே ... என்னவோ தெரியலை... எவ்வளவோ முயற்சி செய்தும் இந்தப் பகுதியை என்னால் எழுதி முடிக்க இயலவில்லை. எழுதுவது என்பது என் கையில் இல்லை.  திருவருளும், குருவருளும் இருந்தால் அன்றி நாம் ஒண்ணும்  கிழிக்க முடியாது.. நாம வெறும் கருவி தான் என்று நமக்கு காட்டிக்கொடுக்கிறது காலம்.  எப்படியாவது இன்று எழுதி முடித்து விடுகிறேன் அன்பர்களே... எழுபதுகளில் நம்ம தேவகோட்டை மக்களிடையே கல்லூரிப் படிப்பு என்பது இன்று போல் எல்லோருக்கும் கிடைக்காத கொம்புத்தேன்.  முக்கால் வாசி நடுத்தரக் குடும்பங்களில் S .S .L .C   என்று சொல்லப்படுகிற உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு தட்டச்சு (TYPEWRITING) சுருக்கெழுத்து (SHORT HAND ) படித்து விட்டு திருச்சியிலோ, சென்னையிலோ ஒரு தட்டச்சராகவோ, எழுத்தராகவோ பணி புரிவது மட்டுமே வாழ்வின் இலட்சியம்.  கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பு படிப்பது என்பது மேல் தட்டு மக்களால் மட்டுமே முடிந்த காலம்.  அதிலும் சில உயர் நடுத்தர (UPPER MIDDLE CLASS ) ...