அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 69
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
20-12-2018
பகுதி: 69
அன்புசொந்தங்களே ...
என்னவோ தெரியலை... எவ்வளவோ முயற்சி செய்தும் இந்தப் பகுதியை என்னால் எழுதி முடிக்க இயலவில்லை. எழுதுவது என்பது என் கையில் இல்லை. திருவருளும், குருவருளும் இருந்தால் அன்றி நாம் ஒண்ணும் கிழிக்க முடியாது.. நாம வெறும் கருவி தான் என்று நமக்கு காட்டிக்கொடுக்கிறது காலம். எப்படியாவது இன்று எழுதி முடித்து விடுகிறேன் அன்பர்களே...
எழுபதுகளில் நம்ம தேவகோட்டை மக்களிடையே கல்லூரிப் படிப்பு என்பது இன்று போல் எல்லோருக்கும் கிடைக்காத கொம்புத்தேன். முக்கால் வாசி நடுத்தரக் குடும்பங்களில் S .S .L .C என்று சொல்லப்படுகிற உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு தட்டச்சு (TYPEWRITING) சுருக்கெழுத்து (SHORT HAND ) படித்து விட்டு திருச்சியிலோ, சென்னையிலோ ஒரு தட்டச்சராகவோ, எழுத்தராகவோ பணி புரிவது மட்டுமே வாழ்வின் இலட்சியம். கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பு படிப்பது என்பது மேல் தட்டு மக்களால் மட்டுமே முடிந்த காலம். அதிலும் சில உயர் நடுத்தர (UPPER MIDDLE CLASS ) வகுப்பினர் கல்லூரி படிக்க ஆரம்பித்து பாதி வழியிலேயே நிறுத்தியதும் உண்டு. ஏன் ..? இன்று கருவேலம் காடுகளும், கல்லூரிகளும் நீக்கமற எங்கும் நிறைந்து தமிழகம் முழுவதுமே ஒரு கல்வி என்பது ஒரு புதிய தொழிலாகவே மாறி விட்ட நிலை இல்லை அன்று . உண்மையில் அந்தக்காலத்தில் கல்விச்சாலைகளை அமைத்த உண்மை உள்ளங்கள் கல்வியை தானமாகக் கருதி, தங்களின் நிலங்களை வழங்கி, கட்டிடங்கள் கட்டி கல்விச்சாலையினை அமைத்தனர் . கல்வித்தந்தை என்று தம்மை அழைத்துக் கொண்டு தமது சொந்தப் பிள்ளைகளையே சுரண்டிப் பிழைக்கத் தெரியாத உண்மை வள்ளல்கள்.
தேவகோட்டையில் இருந்து SSLC முடித்து மேலே கல்லூரிக்குள் செல்ல வேண்டும் என்றால் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்குத் தான் செல்ல வேண்டும் என்ற காலம் அது. எனக்குத் தெரிந்து (எனது வகுப்புத்தோழன் சிதம்பரத்தின் அண்ணன் )போட்டோ கிராஃபர் திரு.ஏகப்பன் அவர்களின் மூத்த மகன் அழகப்பா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தான் முதன் முதலில் வள்ளல் அழகப்பர் விழா கந்தர் சஷ்டி கழகம் விழா முடிந்த அடுத்த நாளில் நடத்தப்பெறுவது ஆரம்பிக்கப்பட்டது. நமது நகரில் இருந்து அழகப்பர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெகுவாக அக்கறை எடுத்து அந்த விழாவினை நடத்தினர். அதன் பின்னர் வருடம் தவறாமல் வள்ளல் அழகப்பர் விழா தேவகோட்டை கந்தர் சஷ்டி கழக மேடையில் நடை பெற்று வருகிறது. 1967 அல்லது 1968 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும் எனது நினைவு சரியாக இருந்தால்... நமது நகர் நகரத்தார் பள்ளி ஆசிரியர் திரு.சோமசுந்தரம் அவர்கள் எழுதிய 'மனம் இருந்தால் வழி பிறக்கும்' என்ற நாடகம் அழகப்பா கல்லூரி மாணவர்களால் நடத்தப்பெற்றது . அந்த நாடகத்தில் போட்டோ கிராபர் ஏகப்பன் அவர்களின் மூத்த மகனும், எனது பள்ளித் தோழன் Y.சிதம்பரத்தித்தின் அண்ணனும் அனவர் ( பெயர் மறந்து விட்டேன்) போலீஸ் காவலராக நடித்து இருந்தார். இரவுக் காவல் பணியில் உறக்கத்தில் கொட்டாவியுடன் உலவுவது போல் நடித்த காட்சி நேற்றுப்போல் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.
அதே போல திருச்சுழியார் வீட்டில் இருந்து திரு.திண்ணப்ப செட்டியார் ( அய்யப்பன் பெரிய குருசாமி ) அவர்களின் மூத்த மகன் திரு.சுவாமிநாதன் அவர்கள் புகுமுக வகுப்புக்கு அழகப்பாவில் சேர்ந்தார். தேவகோட்டையில் இருந்து மிதி வண்டியில் அழகப்பா சென்று வந்தார். ஒரு குழுவாக மாணவர்கள் மிதி வண்டியில் கண்டதேவி சாலை வழியாக, இலுப்பைக்குடி கடந்து காரைக்குடி புகை வண்டி நிலையம் கடந்து அழகப்பா கல்லூரி அடைவார்கள். இந்த திரு.திண் .சுவாமிநாதன் அண்ணன் என் சித்தப்பா பவளம் அவர்களின் செட். பின்னர் MCC (MERCANTILE CREDIT CORPORATION ) இல் பணி புரிந்தார். இவரைத் தொடர்ந்து இவரது தம்பி திரு.ஏகப்பன் அழகப்பர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பயின்றார். திருச்சுழியார் வீட்டுக்கு அடுத்து இருக்கும் லண்டன் தி. (மீனாட்சி ஐஸ் கம்பெனி) திண்ணப்ப செட்டியார் அவர்களின் மூத்த மகன் திரு.வள்ளியப்பன் அவர்களும் அழகப்பாவில் பயின்றார். அவருக்கு இதயம் பேசுகிறது மணியன் அவர்களின் 'பிரயாணக் கட்டுரை' நூல்கள் பாடமாக இருந்ததை அவர் படிக்கின்ற நேரத்தில் அவரது ஐஸ் கம்பெனியில் இருந்து வாங்கி ( மிக இளம் வயது எனக்கு) படித்த நினைவுகளும் இந்த வரிகளை எழுதும் வேளையில் மனவெளியில் மேகங்களாய்க் கடந்து செல்கின்றன.
இப்படி வசதி படைத்தவர்கள் மட்டுமே தேவகோட்டையில் இருந்து வெளியே சென்று கல்லூரி பயில வேண்டும் என்ற நிலை இருந்ததால், நடுத்தள, அடித்தள , ஏழை மக்களுக்கு கல்லூரிப் படிப்பு என்பது எட்டாத கனியாகவே இருந்த காலம். இங்கு தான் வருகிறார் நமது நகரத்தந்தை திரு.இராம வெள்ளையன் அவர்கள். தேவகோட்டைக்கு கல்லூரி வரவேண்டும் என்ற தொலை நோக்கு கொண்டு இருந்தார்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்று பொய்யாமொழிப் புலவன் பொறித்து வைத்ததை போல இச்செயலை சரியாக செய்து முடிக்கும் அன்பு நிறை மனமும் ஆற்றல்மிகு திறமும் யாரிடம் அமைந்து இருக்கிறது என்று ஆய்ந்து அறிந்து தெளிந்து தனது தாய் வழி பாட்டனார் சேவுகன் செட்டியார் அவர்களை அணுகி அவர் மனதில் இவ்வெண்ணத்தைப் புகுத்தி வெற்றி கண்டும் விட்டார். ஆயிற்று தேவகோட்டையிலும் கல்லூரி வந்தது. நில ஆர்ஜிதம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, கட்டிட வேலையில் இருந்து ஒவ்வொரு நிலையிலும் கல்லூரி தேவகோட்டையில் காலூன்றியத்தில் திரு.இராம வெள்ளையன் அவர்களின் கை வண்ணம் இருந்தது. 1970 ஆம் வருடம் புகுமுக வகுப்பு மற்றும் இளங்கலை தமிழ் மற்றும் இளங்கலை பொருளாதாரம் இந்த வகுப்புகளோடு கல்லூரி நடக்க ஆரம்பித்தது. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, வேதியியல், விலங்கியில், வணிகவியல் என்று கல்லூரி வீறு நடை போட ஆரம்பித்தது.
இந்த கல்லூரி ஆரம்பித்த வேளையிலும் தொண்டுள்ளம் கொண்ட தூயவரான வெள்ளையன் அவர்களிடம் பயன் பெற்றவர்கள் ஏராளம். நில ஆர்ஜிதம் செய்த வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கல்லூரிக்கு மிகவும் சாதகமாக எல்லா உதவிகளையும் செய்தார். அவரது உறவினரான திரு.அசோகனுக்கு ஒரு பணி பெற்றுக் கொடுத்தார் வெள்ளையன் அவர்கள். இந்தக் கல்லூரி பலரது வாழ்வினில் விளக்கு அறிவு ஏற்றி ஏழ்மை இருக்க அகற்றி இருக்கிறது. தேவகோட்டையில் கல்லூரி மட்டும் தொடங்காமல் இருந்து இருந்தால், என் போன்றவர் எங்கே பட்டதாரி ஆகி இருக்க இயலும்? என் போன்று எத்தனை எத்தனையோ அடி மட்டத்தில் இருந்தவர்களை ஆகாயம் வரை பறக்க வைத்த அறிவுச்சுரபி அண்ணாமலையார் கல்லூரி.
எனது கல்லூரி அனுபவங்களை 'ஏனோ தானோ' என்று அவசர கதியில் எழுதி பக்கம் நிறைக்க மனம் இல்லை. எனவே பின்னர் அது பற்றி மனம் கசிந்து அசை போடலாம்.
இந்தக் கல்லூரி எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு நல்கி இருக்கும் என்பது சொல்லவும் வேண்டியதில்லை. கல்லூரி அலுவலகப் பணியாளர்களாக (NON TEACHING STAFF ) ஆக எத்தனை சாமானியர்கள் தங்கள் குடும்பத்துக்கு பொருள் ஈட்ட இந்தக்கல்லூரி தாயாக இருந்து வளர்த்து இருக்கிறது. எனக்குத் தெரிந்து, நினைவில் இன்றும் நிற்பவர்கள் :
திரு.சுப்பிரமணியன், தலைமை எழுத்தர்( Photocopying கடை நடத்தி வந்தார்)
திரு.T.சீனிவாசன், எழுத்தர், சிலம்பணி தெரு,
திரு,இராஜப்பா, எழுத்தர்
திரு.இராஜாமணி ( வட்டாணம் சாலையில் நாங்கள் குடியிருந்த பெரிய பள்ளி வாசல் பகுதியில் உள்ள இடையர் தெருவில் இருந்து வருவார்)
திரு.சிங்கதுரை- மேற்படி திரு.இராஜாமணி அவர்களின் உறவினர்
திரு.கரீம், (தொண்டியார் வீதி)
திரு.சீனிவாசன், (WATER MAN) வீரபாண்டியபுரம் நடுத்தெரு, திரு,கோதண்டராமன் அய்யங்கார் மகன்..(நன்றி...திரு,பத்மநாபன் சார்)
திரு.அசோகன்
திரு.குருசாமி ( துப்புரவுத் தொழிலாளர் )
இன்னும் எத்தனை எத்தனை சாதாரண மக்களுக்கு பணியிடமாய் விளங்கிய கோவில் இது .
தொடரின் இந்தப் பகுதி எனக்கு ரொம்பத் தண்ணீர் காட்டி விட்டது. இதை இப்போது பதிவேற்றம் செய்யாமல் இன்னும் கொஞ்சம் சேர்த்து விட்டுப் பின் பதிவேற்றம் செய்வோம் என எண்ணினால் இந்த ஆண்டும் கடந்து விடும் . எனவே எழுதிய வரை பதிவில் ஏற்றி விடுகிறேன். அடுத்த பகுதியில் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் முதலில் நடந்த மாணவர்களின் கலவரமும் அதனைத் திரு.இராம வெள்ளையன் அவர்கள் அதனை சமாளித்த நிலவரமும் பார்ப்போம். இனிமேலாவது வரும் பகுதிகள் தடைகள் வென்று மடைகடந்த வெள்ளமென வெளிவர தங்கள் அனைவரின் ஆசிகளும் வேண்டுதல்களும் வேண்டும் என இந்தப் பகுதியை முடிக்கிறேன்.
PLEASE READ ALL THE EPISODES IN : http://muthumanimalai.blogspot.com
Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள்
கருத்துரையிடுக