சிலம்பணி சிதம்பர விநாயகர்-அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 13
அன்பு சொந்தங்களே ... சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதியை விட்டு ஏனோ அகல முடியாவில்லை . எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முற்பட்டாலும், 'கடுகினைத் துளைத்து கடலினைப் புகுத்திய வகையில் ஒண்ணே முக்கால் அடியில் உலகத்தையே காட்டும் வள்ளுவன் குறள் போல ஏகப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் ஆளுமைகளையும் இந்த சன்னதி தெரு தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது. ஆதலால் தான் எளிதாகக் கடந்து சென்று விட இயலவில்லை. முடிந்த வரை சுருக்கமாகவும், முக்கிய செய்திகள் விடுபட்டு விடாமலும் பார்த்துக்கொள்கிறேன். சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயம் இப்ப சிலம்பணி சன்னதி தெருவில் இருந்த மக்களை ஓரளவு பார்த்தோம். இந்தச் சன்னதியின் சந்தோசமாய், சங்கடம் தீர்க்கும் சக்கரவர்த்தியாய், சகலரும் வணங்கும் சிலம்பணிந்த பாதம் கொண்ட சிதம்பர விநாயகர் பற்றிய செய்திகளை அசை போட்டு விட்டுக் கடப்போமே... தனுசுகோடியில் "வீ யார்' VR சத்திரம் என்று மிக வசதிகளுடன் கூடிய 24 மணி நேரமும் அணையா அடுப்புடன் விளங்கி இராமேசுவரத்திற்கு , இராமன் வழிபட்ட ஈசுவரனை தரிசிக்க வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் சுவையுடன் வழங்கி வருவதற்காக நிர்மாணிக்கப் ப...