அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 18; சத்திய சோதனை
அன்புச் சொந்தங்களே .... அந்த மாணவனுக்கு கல்வி என்ற பெயரில் நெட்டுருப் போட்டு, ஏட்டில் இருப்பதை மூளைக்குள் பதிவு செய்து வேண்டிய பொழுது விடைகளாக தேர்வுத்தாளில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் வாங்கி நல்ல மாணவன் என்ற பெயர் எடுக்கும் நடை முறை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. கல்வி என்பது கலைமகள் கைப்பொருள் என்றால் மற்ற கலைகள் என்ன மாற்றான் தாய் மக்களா? என்ற எண்ணம். வானம்பாடியாய் பறந்து, குயிலாய்ப் பாடி, மயிலாய் ஆடி, ஒயிலாய் நடக்கும் நடிப்பு ஒன்றே மனத்துக்குப் பிடித்து இருந்தது. தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளி... அறிவாற்றல் மிகுந்த பல மாணாக்கர்களுக்கு மத்தியில் இந்த மாணவனுக்குள் மரபணுவில் உறங்கிக் கொண்டிருந்த கலைஞன் எழுந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செல்ல இயலாமல் பாடாய்ப் படுத்திக்கொண்டு இருந்தான். நான் 1969 ஆம் வருடம் தேவகோட்டை சைவப்பிரகாச வித்தியா சாலைய...