இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 21 முள்ளிக்குண்டு பேருந்து எரிப்பு வழக்கு

படம்
  அன்புச்   சொந்தங்களே .... சென்ற பகுதியில் நமது நகர் நீதி அரசரை மற்றும் அவரது வழக்கறிஞர் குழாம் தன்னை மக்கள் திலகம் அவர்களது தி.நகர் இல்லத்தில் அமர வைத்து விட்டு வந்து விட்டோம்.   இப்போது அங்கு செல்வோம்.   இவர்கள் எல்லோரும் தி.நகர் இல்லத்தில் அமர்ந்து எம்.ஜி.ஆருக்காக காத்து   இருந்த போது அவர் திருப்பரங்குன்றம் கிளம்பிக் கொண்டு இருந்தார்.   அரசியல்   வாழக்கையில் உச்சகட்டக்   காட்சியாக பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றி   மிகப்பெரும் தனிக்கட்சியாக ஆட்சிக்கட்டிலில் ' தனிக்காட்டு ராஜாவாக ' நின்ற தி.மு.க. என்னும் பெரிய கோட்டையில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்ட நேரம்...   அவரது இரசிகர்களை தொண்டர்களாக மாற்றிய காலம்.   இவர்கள் தனக்காக காத்திருந்ததைக் கண்டு அவர்களுடன் அமர்ந்து உரையாடினார்.   வழக்கறிஞர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப் பட்டதற்கு கன்டனம் தெரிவிக்கும் வண்னம்   சென்னை அண்ணா சிலை அருகே உண்ணா நோன்பு இருக்கப் போவதாக அவரிடம் தெரிவித்தனர்.   தனக்காக யாரும் சிரமப்பட வேண்டாம் என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருந்...

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 20 நூறு வயசு வரை வாழ நினைப்பவருக்கு யோசனை

படம்
  காலம் கரைக்காத நிகழ்வுகளே இல்லை. சிலர் வாழ்ந்த காலத்தை ஒரு குறிப்பீடாக இங்கே வைத்து விட்டுச் செல்கிறார்கள்.   அதனால் தான் மனிதர் மறைவினை ' காலம் ஆகி விட்டார் ' என்ற வாக்கியத்தில் குறிக்கிறோம்.   ஆயினும் அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே காலம் என்னும்   கரையான் அரித்து   விட இயலாத பெரு வாழ்வு வாழ்கின்றனர்.   அப்படி ' காலத்தை வென்றவர்... காவியம் ஆனவர் '  மக்கள் மனதில் என்றும் வாழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.   அவர் நடித்த திரைப்படங்களில் அவருக்காக எழுதிய பாடல்களே அவரது வாழ்வினை என்றும் காட்டும் வண்ணம் வாழ்ந்தவர்.    அவர் நடித்த ' என் அண்ணன் ' என்ற திரைப்படத்தில்   ஒரு பாடல் காட்சியில் இந்த வரிகள் இடம் பெறும் . ' என் அண்ணன்' திரைப்படம் நூறு வயசு வரை வாழ நினைப்பவருக்கு யோசனை வைத்திருந்தால் சொல்லு சொல்லு.... நீ சொல்லு...சொல்லு... சாமி .. தருமன் என்று ஊரே புகழ்ந்துரைத்தால் நூறு வயசுக்கு மேல் உண்டு   உண்டு... ஒரு நூறு வயசுக்கு மேல் உண்டு உண்டு     தனக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் படி இவர் வாழ்வை அமைத்துக்க...