தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-3.அட... நம்ம 'பல'காரங்கள்

அட... நம்ம 'பல'காரங்கள் மல்லிகைப்பூ இட்லி , மணக்கும் சாம்பார் .... நான் நாக்கை நம்பி வாழும் ஜீவன் அப்பா என்று ' அன்பே வா ' திரைப்படத்தில் நாகேஷின் பின்னால் இட்லி சாம்பாருக்காக அலையும் நடிகர் T .R. இராமச்சந்திரனைப் பார்த்தால் சூடான இட்லி , அதற்குத் துணையாய் சாம்பார் , பக்கத்திலேயே சட்னி என்று நமது தமிழக உணவு எவ்வளவு நம் உணர்வோடு கலந்து விட்டது என்பது தெரியும் . எண்ணெய் படாமல் ஆவியில் வெந்து நம் ஆவியில் கலந்து விட்ட இட்லி நமது பாரம்பரிய உணவு என்று இறுமாந்து இருந்த எனக்கு , இங்கே இந்தோனேசியா தான் இட்லியின் பூர்விகம் , இந்தோனேசியாவைப் பிறந்த இல்லமாகக் கொண்ட ' கெட்லி ' தான் ஊர் மாறி பேர் மாறி இங்கே ' இட்லி ' ஆகி விட்டாள் என்ற ' உணவு வரலாற்று ஆசிரியர் திரு .K.T. ஆச்சார்யா ' அவர்களின் கூற்றை இட்லி மேல் கொண்ட மோகத்த...