தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) - 1.ஜட்கா
ஜட்கா
ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் பேருந்து நிலைய வாசலிலும், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலக வாசல்களிலும் நிறைய காணப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் சீமான்களும் சீமாட்டிகளும் மூடித் திரையிடப்பட்ட கோச்சு வண்டிகளில் பயணமாயினர். இன்றும் பக்கிங்காஹாம் அரண்மனையில் குதிரைகள் பூட்டப்பட்ட இந்த வண்டிகள் அரசு விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கோச் வண்டி பல குதிரைகள் பூட்டப்பட்டு இருக்கும்.. இதன் எளிய வடிவமாக ஒற்றைக் குதிரை பூட்டப்பட்டது தான் இந்த 'ஜட்கா'.
சென்னை ராஜதானியில் நகரங்களுக்கு இடையில் ஆங்கிலேயர் காலத்தில் சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து அதிகரித்து அதன் பின்னர் இரயில் வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்து ராயபுரம், சென்ட்ரல் இரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பின்னர் மெட்ராஸ் வந்து இறங்கும் பயணிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 'ஜட்கா' வண்டிகள் தான்.
இலண்டன் மாநகரில் இருந்து சென்னை வந்த ஒரு தமிழர் மதராஸ் 'ஜட்கா' வண்டி பற்றி அனுபவித்து எழுதியதை கீழே பாருங்கள்.
சென்னபட்டணத்தில் காணப்படுகிற ஜட்கா மாதிரி அங்கே (லண்டனில்) தேடித் தேடி அலைந்தாலும் கிடைக்காது. அந்த ஜட்கா சென்னைப் பட்டணத்திற்கென்றே விஷேசமாயல்லவோ ஏற்பட்டிருக்கிறது. பிரமனுடைய சிருஷ்டிகளில் எதைத்தான் அதற்குச் சமானமாய்ச் சொல்லலாம் ? பம்பாய்க்குப் போனால் தான் என்ன, கல்கத்தாவுக்குப் போனால் தான் என்ன?
என்று சிலாகித்து இன்னும் மேலே எழுதியிருக்கிறார்.
நமது தேவகோட்டை ஜமீன்தார் வீட்டின் முகப்பில் (போர்டிகோவில்) மூடிய கோச் வண்டி பல ஆண்டுகளாக உபயோகிக்காமல் நிறுத்தி வைத்து இருப்பதை சிறுவனாக இருந்த போது கண்டு இருக்கிறேன்.
மற்றபடி குதிரை வைத்து குதிரை வண்டி வைத்து வாழ்கை நடத்தியவர்கள் பெரும்பாலும் இசுலாமிய சகோதரர்களே. தேவகோட்டையில் எனது வகுப்பு தோழன் செய்யது முகமது என்பவரின் பாட்டனார் மற்றும் தகப்பனார் காந்தி ரோடில் குதிரை வண்டி சேவை செய்து இருந்தார்கள். தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு முன்புறம் நிறைய குதிரை வண்டிகள் அணி வகுத்து நிற்கும் அந்தக் காலகட்டத்தில் .
இந்தோனேசியாவில் இன்றும் 'ஜட்கா' வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பொதுப் போக்குவரத்துக்கு அல்ல. தலையில் குஞ்சம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட குதிரைகளும் அந்தக்கால விளக்கு பொருத்திய வண்டிகளும் சிறார்களையும், உல்லாசப் பயணிகளையும் 'உல்லாச சவாரி' செய்ய முக்கிய பொழுது போக்கு இடங்களில் காணப்படுகின்றன.
நேற்று ஜகார்தாவின் புறநகர் பகுதியில் 'சி பு பூர்' என்ற பெரும் பூங்கவிற்கு சென்று இருந்த சமயம் கண்ட 'ஜட்கா வண்டி' இந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ள வைத்தது.
ராவுத்தரே கொக்கா பறக்கிறார்,குதிரைக்கு பஞ்சாமிர்தம் கேக்குதாம்…
பின்னூட்டங்கள்
முகமது சபீ அவர்கள், ஐக்கிய அரபு தேசத்தில் இருந்து..( Mr.Mohd Shafee and myself worked in the same Garments Division of Texmaco Group in Jakarta, Indonesia in 80~90s)
ஜட்கா வண்டியில் பயணிகள் உட்காரும் இடத்தில் புற்களை அடைத்த சாக்கு மெத்தை அமைக்கப்பட்டிருக்கும். வெயில் மற்றும் மழையிலிருந்து காக்க, தலைகீழ் ஆங்கில U அல்லது தமிழ் ' ப' போல் அமைக்கப்பட்டிருக்கும்.
மீலாத் நபி நாளில் இஸ்லாமியர்கள் திருவல்லிக்கேணி யிலிருந்து பல்லாவரம் சென்று மாலையில் திரும்புவார்கள். அதை மிகவும் வேகமாக ஓட்டுவார்கள். சாலையில் இருபுறமும் மக்கள் நின்று ஆரவாரம் செய்வார்கள். மக்கள் ஜட்கா உபயோகப் படுத்துவதை குறைத்துக்கொண்டார்கள். பிறகு மருத்துவ மனையில் இறந்த சடலத்தை கொண்டு செல்ல பயன் படுத்தினார்கள்.
திருமண விழாக்களில் விக்டோரியா பயன் படுத்தினார்கள்.1964 ம் வருடம் என் மூத்த சகோதரர் மற்றும் 2002 ம் வருடம் என்னுடைய சகோதரி மகன் திருமணத்திற்கு விக்டோரியா பயன் படுத்தினார்கள். 1930 வருடங்களில் என் பாட்டனார் ஒரு ஜட்கா வைத்திருந்தார்கள். சோமு என்பவர் ஜட்கா வை ஓட்டுவார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை யிலிருந்து பிரியும் ஒரு சந்தில் வீடு இருந்தது. சந்து திரும்பியது கையில் இருந்த சவுக்கின் மூங்கில் பகுதியை சக்கரத்தில் வைத்து ஒலி எழுப்புவார். அதுவரை ஆட்டம் போட்டு கொண்டிருந்த எல்லோரும் அமைதியாக அறையில் சென்று விடுவார்கள். அந்தக் காலத்தில் பெற்றோருக்கு பயந்து வாழ்ந்த காலம். குதிரை படுத்து உறங்க விசேஷ மெத்தை வைத்திருந்தார்களாம். 1952 ல் நான் மழலையர் பள்ளியில் படிக்கும் போது ஜட்காவில் பயணம் செய்துள்ளேன். சென்னை வாலாஜா சாலையில் பாரகன் தியேட்டர் எதிர்ப்புறம் ஜட்கா ஸ்டான்ட் இருந்தது.
2. Mr.Sukumar, Jakarta, Indonesia:
Here also SADO(JADKA) are being used for public transportation in Bogor,Jawa ,Bandung, Bali and some part of Indonesia. Especialy in Solo and Jogja the Sultan/Prince using this Jadka for marriage ceremony and they still make special Abhisekam and puja for these Jadkas since the Dutch time.
Wow!! Very good information..This is not just ride but it our connecting roots. Should be valued.. Thank you sir for this article.
பதிலளிநீக்குநன்று.ஐயா.இன்றும் பழனியில் இந்த வண்டி ஓடுகின்றன.பயணம் சுகமான அனுபவம்தான்.நான் சென்று வந்தேன்.
பதிலளிநீக்குநானும் ஒற்றை குதிரை வண்டியில் (ஜட்கா) பயணித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குலைசென்ஸ் முடியும் தருவாயில் எப்படியோ நினைவு வந்து லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டதைப் போல என் நினைவு அடுக்களிலிருந்து ஜட்கா நினைவுகள் மங்கி வரும் வேளையில் கவிஞர் முத்துமணி ஜட்காவில் சவாரிசெய்ய வைத்துவிட்டார். .
முத்துமணியின் முத்திரை ஒரு நிகழ்வைப் பதிவு செய்யும் போது அந்தக் காலகட்ட சமூகத்தையும் கண் முன் நிறுத்துவார். வாசகர்களுக்கும் அதே அலைவரிசையில் தங்களது flash back மனத்திரைகளில் ஓடும்
என்னுடைய flash back: ஜட்கா சாரதி ஒரே நேரத்தில் பல வேலை செய்ய வேண்டும். குதிரையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு தீனி அளந்து போட வேண்டும். முக்கியமாக பயணிகள் ஏறும் வண்டியை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எங்கள் உறவினர் ஒருவர், ஜட்கா வண்டியின் பரம ரசிகர். தேவை இருக்கிறதோ இல்லையோ நாள் முழுவதும் ஜட்கா வண்டி வாசலில் நிற்கும்.
அந்த ஜட்காவின் சாரதி பல்கலை வித்தகர் குமரய்யாவும் இப்போது என் மனக் கண் முன் நிற்கிறார்.
அந்த காலகட்டத்தில் தேவகோட்டையில் ஜட்கா வண்டியில் பிரயாணம்
பதிலளிநீக்குசெய்தது மறக்க இயலாது.
எனது இரண்டாவது பிரசவத்திற்கு எங்கள் அம்மாடி வசித்த சந்தைப் கடையில் இருந்து ஜட்கா வண்டியில் அரசாங்க ஆஸ்பத்திரி க்கு சென்றது மறக்க முடியாது.
பழனியில் வசிக்கும் எங்கள் அக்கா வீட்டுக்கு செல்லும் போது பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில் போவோம்
குழந்தைகள் சந்தோஷமாக இருப்பார்கள்.
மிக அருமையான பதிவு.நனறி
வணக்கம்..
ஜட்கா என்பது குதிரை பூட்டிய வண்டி. 1950, 60 களில் அன்றைய மதராஸ் மற்றும் தென் இந்தியாவில் பரவலாக காணப்பட்டது. பம்பாயில் விக்டோரியா என்றும் டில்லி பகுதிகளில் டோங்கா என்றும் அழைக்கப்படுகிறது. பல ஹிந்தி படங்களில் இவற்றை கண்டிருக்கலாம். (உ.ம் விக்டோரியா 203, ஷோலே, மரத்)
பதிலளிநீக்குவச்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ஜெமினி கணேசன் விக்டோரியா உபயோகப் படுத்தி இருப்பார்.
ஜட்கா வண்டியில் பயணிகள் உட்காரும் இடத்தில் புற்களை அடைத்த சாக்கு மெத்தை அமைக்கப்பட்டிருக்கும். வெயில் மற்றும் மழையிலிருந்து காக்க, தலைகீழ் ஆங்கில U அல்லது தமிழ் ' ப' போல் அமைக்கப்பட்டிருக்கும்.
மீலாத் நபி நாளில் இஸ்லாமியர்கள் திருவல்லிக்கேணி யிலிருந்து பல்லாவரம் சென்று மாலையில் திரும்புவார்கள். அதை மிகவும் வேகமாக ஓட்டுவார்கள். சாலையில் இருபுறமும் மக்கள் நின்று ஆரவாரம் செய்வார்கள்.
மக்கள் ஜட்கா உபயோகப் படுத்துவதை குறைத்துக்கொண்டார்கள். பிறகு
மருத்துவ மனையில் இறந்த சடலத்தை கொண்டு செல்ல பயன் படுத்தினார்கள்.
திருமண விழாக்களில் விக்டோரியா பயன் படுத்தினார்கள்.1964 ம் வருடம் என் மூத்த சகோதரர் மற்றும் 2002 ம் வருடம் என்னுடைய சகோதரி மகன் திருமணத்திற்கு விக்டோரியா பயன் படுத்தினார்கள்.
1930 வருடங்களில் என் பாட்டனார் ஒரு ஜட்கா வைத்திருந்தார்கள். சோமு என்பவர் ஜட்கா வை ஓட்டுவார். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை யிலிருந்து பிரியும் ஒரு சந்தில் வீடு இருந்தது. சந்து திரும்பியது கையில் இருந்த சவுக்கின் மூங்கில் பகுதியை சக்கரத்தில் வைத்து ஒலி எழுப்புவார். அதுவரை ஆட்டம் போட்டு கொண்டிருந்த எல்லோரும் அமைதியாக அறையில் சென்று விடுவார்கள். அந்தக் காலத்தில் பெற்றோருக்கு பயந்து வாழ்ந்த காலம். குதிரை படுத்து உறங்க விசேஷ மெத்தை வைத்திருந்தார்களாம். 1952 ல் நான் மழையர் பள்ளியில் படிக்கும் போது ஜட்காவில் பயணம் செய்துள்ளேன்.
சென்னை வாலாஜா சாலையில் பாரகன் தியேட்டர் எதிர்ப்புறம் ஜட்கா ஸ்டான்ட் இருந்தது
குதிரை வண்டி என்ற பொதுப்பெயரில் மட்டுமே பலரும் அறிந்து இருக்கின்ற வேளையில் இந்த வண்டிகளின் வகைகளை பற்றியும் அத்துடன் உங்களின் சொந்த அனுபவங்களையும் சேர்த்து பின்னூட்டமாகக் கொடுத்தது அடுத்து வரும் தலைமுறைக்கு ஒரு ஆவணமாகச் சென்று சேரும். நன்றி. வாழ்த்துகள்.
நீக்கு1969 வரை சென்னை மூர் மார்க்கெட் பின் புறம் டிசம்பர் ஜனவரி மாதத்தில் ஒரு பொருட்காட்சி நடக்கும். அங்கு ஜட்கா மற்றும் மாட்டு வண்டி போட்டிகள் தினந்தோறும் நடக்கும் .
நீக்கு