18.கலிங்கத்துப் பரணி

18. கலிங்கத்துப் பரணி தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- அன்புத் தமிழ்ச் சொந்தங்களே ..... எகிப்தில் இருந்து கடல் வணிக வழிகளை கி.பி. 60 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 'The Periplus of the Erythraean Sea' எழுதப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்களைக் கொண்டு அறியலாம். பாரதத்தின் துறை முக நகரங்களின் முதல் நூற்றாண்டு கால வடிவங்களை நமது கண் முன்னே காட்சிகளாய் விரிக்கும் இந்த வரிகளைப் பாருங்கள். இறக்குமதிச் சந்தைகள் நிறைந்த பெருந் துறைமுகங்களில் 'தமிரிகர்' (தமிழர்) மற்றும் வட நாடுகளில் இருந்து வந்திருந்த கலங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றில் முக்கியமாக, தமிரிகா (தமிழகம்) கரையோரம் உள்ள ( வரிசைக் கிரமப்படி...) சமரா/CAMARA (பூம்புகார்), அடுத்து போதுகா/PODUCA (புதுச்சேரி )பின்னர் சோபாத்மா /SOPATMA (மரக்காணம்) பகுதிகளின் கடற்கலங்கள். அவற்றில் மிகப்பெரிய தடி மரங்களை பிணைத்துக் கட்டப்பெற்ற ...