அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 67

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 29-10-2018 பகுதி: 67 அன்புசொந்தங்களே ... இந்த பகுதி பதிவில் ஏறியவுடன் அன்பு ஆசிரியர் திரு.பத்மநாபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்து தொலை பேசியில் அழைத்தார். விட்டுப்போன செய்திகளை விவரித்தார். அவற்றை பிற் சேர்க்கையாக கீழே கொடுத்து இருக்கிறேன். அப்படி இல்லாமல் எனது பதிவை அப்படியே திருத்தினால், நிகழ்வுகளை நினைவில் சுமந்து இந்த தொடரில் சரித்திரப் பிழை வந்து விடாமல் காப்பாற்றிய நல்ல இதயங்களுக்கு நன்றி தெரிவிக்க இயலாமல் போய் விடும். எனக்கு பல செய்திகளையும் அவ்வப்போது தந்து என்னை ஊக்குவிக்கும் ஆசிரியர் திரு.பத்மநாபன் பாதார விந்தங்களில் பணிந்து என் நன்றியினை இந்தப் பதிவினில் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மூலம் அறிந்தவை: எனது பதிவில் கண்டது போல தேவகோட்டையில் நடத்தப்பெற்ற ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட மாநாட்டுக்குக் கடைசி நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களால் வர இயலவில்லை. கலைஞர் கலந்து கொண்டார் மாநாட்டுக்குத் தலைமை ஏற்றது அன்றைய முகவை மாவட...