இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-13 . இந்தோனேசியாயாவிலும் மகா மேரு

படம்
  13 .   இந்தோனேசியாயாவிலும் மகா மேரு மதம் அல்ல ...பண்பாடு இந்தோனேசியாவில் நமது பாரதப்   பண்புகளை அடையாளம் கண்டு உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தத் தொடரின் நோக்கமாகும். அப்படி நாம் பயணம்   செய்யும் போது அந்தச் செய்திகளின் தொடர்பான அரசர்கள்   மற்றும் வரலாறு பற்றிய விபரங்களையும் பார்த்துக் கொண்டே நகர்கிறோம் ... அலுப்புத் தட்டாமலும் அறுவை என்று ஆகாமல் இருக்க... ஜகார்தாவில் எழும்பி வரும் ஆலயம் இந்தோனேசிய   நாட்டின் 87 விழுக்காடு மக்கள் இசுலாத்தைத் தழுவிய போதும் நமது பாரத இதிகாசக்   கதா பாத்திரங்கள்   இன்னும் சீர் குலையாமல் இங்கே உலவி வருகின்றன, பெயர்களில் இன்னும் இன்றும். இங்கே இன்றைக்கும் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் : அபிமன்யு, அர்ஜுனா, அருணா, ஆர்யா,   ஆதித்யா,ஆத்மோ டிக்கோரோ, அசோகா, அபிச்சந்திரா, பீமா , அக்னி, அங்காரா, அயுத்தியா (AYODHYA), பாங்க்யு (bangyu / பானி இந்தியில்), பாஸ்கரோ , புடி ஹர்த்தோ (BUDI புத்திசாலி, ஹர்த்தா என்றால் செல்வம்), புத்ரா, சந்திரா, கிருஷ்ணா, கணேசா, கருணா, கடோத்(கதோத்கஜா), தேவா, தர்மா, க்ரோமோவிஜயோ (கிரா...

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-12 .தசமுகன் -சாவக இராமாயணம்

படம்
12 .   தசமுகன் - சாவக இராமாயணம்   சரி, சென்ற பதிவில் அனுமன் ஏன் இந்த பாண்டுங்கான் மலையின் உச்சியின் மீது   நின்ற கோலத்தில் தனிமையில் இருக்கிறார் என்ற வினாவோடு முடித்து இருந்தேன்.   அத்துடன் இராமாயணமும், மகா பாரதமும் அகண்ட பாரதம் முழுவதும் வியாபித்து, தென் கிழக்கு நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம்   மற்றும் மியான்மர் என்று இன்றைக்கு பெயர் வழங்கப்படும் அந்த நாட்களின் இராச்சியங்களிலும் எண்ணிலா ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தே வழங்கி வந்து இருக்கின்றன என்றும் கண்டோம்.   ஆயினும், நாட்டுக்கு நாடு, பகுதிக்குப் பகுதி அந்தந்தக் கலாச்சாரத்துக்குத் தக்கபடி சிறிய மாற்றங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ,இராமனும் சீதையும் முதன் முதலில் சந்திக்கும் காட்சியே ஒவ்வொரு   பகுதிக்கும் ஏற்றவாறு மாறுபட்டு ஒவ்வொரு கவிஞரின் வார்த்தைகளிலும் வெளிப்படும்.   வட இந்திய இராமாயணத்தில் வால் மீகியும் சரி, துளசி தாசரும் சரி இவர்களின் முதல் சந்திப்பை ஒரு தெய்வீக நிலையோடு பொருத்தி இருப்பார்கள் . துளசிதாசர் தான் எழுதிய காவ்ய இராமச்சரித்மானஸ் (kavya Ram...

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-11.தொடர் கோவில்கள்-மலை மேல் அனுமன்

படம்
11.தொடர் கோவில்கள்-மலை மேல் அனுமன்  Ganesha relief at Gedong Songo III-Central Java கடந்த பகுதியினை   முடித்த போது , அடுத்த சண்டியில் நமது சந்திப்பைத் தொடரலாம் என்று தான் முதலில் எண்ணினேன் , ஏனெனில் நிறைய சண்டிகள் ( கோவில்கள் ) நமது அட்டவணையில் வரிசை கட்டி நிற்கின்றன .   அவற்றின் பின்னணியில் மதம் , மதச்சடங்குகள் , அதை ஒட்டிய கதைகள் , நம்பிக்கைகள் , பாரம்பரியம் மற்றும் இவை அனைத்தையும்   அணைத்துச்   செல்லும் அரச பரம்பரைகள் என்ற பின் புலம் பற்றித் தெரிந்து கொள்ளாமல் , இன்றைக்கு வெறும் கற்றளிகளாகச் சிலவும் , கற்குவியல்களாகப் பலவும் எனக் கிடக்கும் சண்டிகளைப் ( கோவில்களை ) பற்றி எழுதினால் மூலவர் இல்லாத இந்தக் கோவில்களைப்   போலவே இரசிக்கவோ , மனதில் இருத்தவோ இயலாது .   அதே வேளை , அரச பரம்பரை பற்றி மட்டும் எழுதினாலும் தலையும் புரியாது , வாலும் புரியாது .. மனதில் நிற்காது ... எனவே ஒரு பயணியைப் போல உங்களை என்னுடன் நான் கண்ட பகுதிகளுக்கு (கற்றது  கைமண் கூட இல்லை ) அழைத்துச் செல்கிறேன் . ...