இடுகைகள்

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 19; நாடகமே உலகம்

படம்
  அன்புச்   சொந்தங்களே .... துணை நகரங்கள்   ( satellite town) என்று இன்றைக்கு அழைக்கப்படும் அருகாமை புதிய முயற்சிகள் போல   தேவகோட்டையின் விரிவாக்கமாக அன்றே அமைந்த தனி இடம் தேவகோட்டை இராம் நகர்.   தேவகோட்டையின் விரிவாக்கம்.   தே   பிரித்தோ உயர் நிலைப் பள்ளி , கருவூலம் , நீதி மன்றங்கள் , பதிவுத்துறை அலுவலகம் என அமைதியாக ஆனால் அவசியமான பணிகள் நடை பெறும்   இடம்.    கொஞ்சம் உள்ளே சென்றால்   அந்தக் காலத்தில் தேவகோட்டையின் பெரும் செல்வந்தர்களுக்கு தனித்தனியாக ஆடம்பர பங்களாக்கள் அமைந்து இருந்த இடம் இராம் நகர்.    மிகப் பெரும் பங்களாக்கள்...விருந்தும்.. ' மருந்தும் '   விளையாடும் பெருந்தனக்காரர் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வைத்திருந்த பங்களா வீடுகள் , மலர்த் தோட்டங்கள்   .. என அழகு கொஞ்சி விளையாடிய இடம்.. இராம் நகரில் அமைந்து இருந்த நீதி மன்ற , மற்றும் ஆவணப்   பதிவு மற்றும்   ஆவணக் காப்பகங்களில் மனு அளிக்க வருபவர்கள் பெரும்பாலும் கையொப்பம் மட்டும் இடத்தெரிந்தவர்கள்.   கல்வி அறிவு இருப்பவர்கள் கூட ஆவணம் எழு...

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 18; சத்திய சோதனை

படம்
  அன்புச்   சொந்தங்களே .... அந்த மாணவனுக்கு கல்வி என்ற பெயரில் நெட்டுருப் போட்டு, ஏட்டில் இருப்பதை மூளைக்குள் பதிவு செய்து வேண்டிய பொழுது விடைகளாக தேர்வுத்தாளில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் வாங்கி நல்ல மாணவன் என்ற பெயர் எடுக்கும் நடை முறை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.   கல்வி என்பது கலைமகள் கைப்பொருள் என்றால் மற்ற கலைகள்   என்ன மாற்றான் தாய் மக்களா?   என்ற எண்ணம்.   வானம்பாடியாய் பறந்து, குயிலாய்ப்   பாடி, மயிலாய் ஆடி, ஒயிலாய் நடக்கும் நடிப்பு ஒன்றே மனத்துக்குப் பிடித்து இருந்தது.   தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளி... அறிவாற்றல் மிகுந்த பல மாணாக்கர்களுக்கு மத்தியில் இந்த மாணவனுக்குள்   மரபணுவில் உறங்கிக் கொண்டிருந்த கலைஞன் எழுந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செல்ல இயலாமல் பாடாய்ப் படுத்திக்கொண்டு இருந்தான்.                                                  நான் 1969 ஆம் வருடம் தேவகோட்டை சைவப்பிரகாச வித்தியா சாலைய...