அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 21

அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 21
01-11-2017

ஒருவழியாக 19, வட்டாணம்  ரோடுக்கு வந்து விட்டோம். முந்தைய பகுதியில் இருப்பிடத்தை மட்டுமே பார்த்தோம்சுற்றுப் புறங்களை இன்னும் பார்க்கவில்லை .கொஞ்சம் ஏரியா ரவுண்ட்ஸ் போவோமா?, விலாவரியாக... ஒவ்வொரு அறிமுகத்துடனும் அவர்கள் சார்ந்த இடங்களையும் பார்த்து விடலாம் என்பது திட்டம்இடம் சுட்டிப் பொருள் விளக்கு??!!

முதலில் தோட்டத்துக்கு சொந்தக்காரர்களான திருச்சுழி வீட்டுக்குள் நுழைவோமே.   நேர் ஏதிர் வீடுஉயரமான படிகளில் ஏறி வந்தால் இரும்புக்கம்பிகள் வைத்த கதவு.   நுழைந்ததும் வீட்டின் வலது புறமும், இடது புறமும் கிணறுகள்.   கிணற்றை சுற்றி சிறிய தோட்டம்  வாழை மரங்கள் என்றும் செழிப்புடன்கிணற்றடி இருக்கும் இரண்டு பகுதிகளுக்கும் நடு நாயகமாக ஒரு நீண்ட பாதைமேலே இரும்புப் பட்டைகள் அழகாக வளைத்து இரண்டு பகுதிகளையும் இணைக்கும் ஒரு வளைவு (ARCH ).  இந்த கம்பிகளுக்கு இடையில் மரச்சட்டங்கள் அடிக்கப்பட்டு ஒரு பந்தல் போன்ற அமைப்பு. இதில் பற்றி படர்ந்து இருக்கும் முல்லைக்கொடி

காலையில் போதாக  அரும்பும்  முல்லை
மாலையில் மலராக   விரும்பும் ....

வெள்ளைத் தீபங்களாய் நின்று கொண்டிருக்கும் முல்லை மலர்கள் கொய்யப்படும் தொடுப்பதற்காகபக்கத்திலேயே ஒரு சீனி கொய்யா மரம் வலது பக்க பகுதியில்.   அண்ணாமலை செட்டியாரின் பெரிய வேம்பா கம்பீரமாக நிற்கும்மார்கழி மாதம் என்றால்  இந்த வேம்பா காலையில் 3 மணிக்கே வேலை செய்ய ஆரம்பித்து விடும்அருகிலேயே வறட்டி சாம்பல்..பூத்திருக்கும் ஆம்பல்....  வலது பக்க கிணற்றடியில் ஒரு ஷெட் இருக்கும்.. அதன் அருகிலேயே ஒரு சின்ன கதவு. அதற்குள் சென்றால் அடுத்த வீடான லண்டன் தி வீட்டுக்கு செல்ல வழி பிறக்கும். இரண்டு வீடுகளுக்கும் இடையில் இடைவெளியாக நீண்ட வெற்றிடம், கீழ் மேலாக, அந்த இடைவெளி நிலத்திலும் பப்பாளி பூத்து, காய்த்து கனிந்து கிடக்கும். நல்ல செழுமையான மண்.

அந்த கிணற்றடிக்குள்  செல்லாமல் நேராகச் சென்றால்  இரண்டு பக்கமும் அருமையான சதுரங்க பலகையை பிரமாண்ட வடிவில் செய்து விரித்து வைத்தது போல கருப்பு வெள்ளை வண்ணத்தில் பளிங்கு கற்கள் பதித்த பெரிய திண்ணைஎத்தனையோ இரவுகள் இங்கு நான் படுத்து உறங்கி இருக்கிறேன்அந்த பிரமாண்ட திண்ணை போதாது என்று அந்த நீள அகலத்துக்கு இரண்டு பக்கமும் பெஞ்ச் போடப்பட்டு இருக்கும்இந்த திண்ணையின் கடைசியில் ஒரு அறை (இரண்டு பக்கமும் தான் ).  வலது புறம் உள்ள அறை சுந்தரய்யா மகன் காசி அண்ணன் அதிகம் பயன் படுத்துவார்இடது புறம் உள்ள அறை எக்ஸ்க்ளூசிவ் அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு.  அடுத்து நகரத்தார் பெருவீடுகளின் வழக்கமான பாணியில் வளவு, மேவீடு, இரண்டாங்கட்டுஅடுத்த கட்டுகள், சாமி வீடு, அடுப்பங்கரை, கொல்லைப்புறம் என வீடு நீளும்.
வலது புறம் பங்கு உள்ள பெரியவர் அண்ணாமலை செட்டியார் பெரும்பாலும் இதை அடுத்து வரும் பாட்டலையில் தான் இருப்பார்அண்ணாமலை ஐயாவுக்கு மகள் வயிற்றுப்பேரன் திண்ணன் செட்டி ஊரணி மேல் கரையின் பின்புறம் உள்ள முளைக்கொட்டு திண்ணைக்கு அருகில்ஒரு ஸ்டாண்டர்ட்  கார் வைத்து இருந்தார். அடுத்தவர் இராமநாதன் என்ற திருச்சபை அண்ணன்கம்பத்திலியே செட்டில் ஆகி விட்டார்குடும்ப நிகழ்வுகளுக்கு தேவகோட்டை வருவார்இவரது மக்கள் :

பெரிய லட்சுமணன்
சின்ன லட்சுமணன்
கண்ணன் என்கிற Dr. அண்ணாமலை ( சென்னை முகப்பேரில் கிளினிக் நடத்தி வருகிறார் வெகு காலமாக )


முத்துஇவர் என் வயது ஒத்தவர் . வங்கி அதிகாரியாக இருக்கிறார்என் சித்தப்பா பவளம் அவர்கள் இவரை செல்லமாக 'முரடன் முத்துஎன்று அழைப்பார்.
அடுத்து சோமசுந்தரம் என்கிற ராஜேந்திரன்இந்த தொடரை படித்து விட்டு இவரது மகன் ( மூன்றாவது தலை முறை ) பெங்களூரில் பணி புரியும் லெட்சுமணன் தொடர்பு கொண்டார்மிக்க மன மகிழ்வு அடைந்தேன்

இந்த சகோதரர்களில் முத்து அவர்கள் என் வயது ஒத்தவர்டாக்டர்.அண்ணாமலை அவர்களுக்கும் முத்து வுக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லைமற்றவர் சின்னவர்இவர்கள் கோடை விடுமுறைக்கு தேவகோட்டை வருவார்கள்அங்கு விளையாடும் இடம் நாங்கள் குடியிருந்த தோட்டம் தான்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ...
பெற்றால் தான் பிள்ளையா ....
சொந்தம் எப்போது தொடர் கதை தான்
முடிவே இல்லாதது .....
உறவுகள் மலர்வதற்கு மனம் தானே காரணம் ...

இப்போது சுகம் மருத்துவமனை இருக்கின்ற இடம் பெரிய பங்களாவாக இருந்ததுஅதை திருச்சபை அண்ணன்  வாங்கினார்கள்பின் நீண்ட காலம் வாடகைக்கு விட்டு இருந்தார்கள் .   முதலில் ஒரு மலையாள என்ஜினீயர் குடி இருந்தார். பின்னர்  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிக காலம் வாடகையில் இந்த இடத்தை உபயோகப்படுத்தினார்கள்.

அண்ணாமலை ஐயாவுக்கு அடுத்து விசாலாக்ஷி என்று பெண் மகவுசாலாட்சி என்று அழைப்போம்என் சித்தப்பா பவளம் அவர்கள் செட், பள்ளி வயதில்..அப்புறம் பார்க்கவே இல்லை..

அண்ணாமலை ஐயாவுக்கு என் மீது மிகப்  பிரியம்.. நேரில் காட்டிக்கொள்ள மாட்டார்அது உணர மட்டும் முடிகிற உறவு. வெளி ஆட்களுக்குத் தெரியாது.   திடீர்னு வீட்டுக்கு வருவார்.   மணி வா, கோட்டூர் கோவில் விசேஷம். போயி வருவோம் என்பார்அப்படினா வண்டி மாட்டுல போகணும்னு அர்த்தம். எனக்கு என்ன  9 அல்லது 10 வயது இருக்கும்எனக்கு ஒண்ணும் தெரியாது மாட்டை பூட்டவெல்லாம்... அவருக்கு துணைக்கு ஒரு ஆள் வேணும். இப்படி செய்யி.. அப்படி செய்யினு ரெண்டு பெரும் கிளம்பிருவோம்வண்டியில் ஒரு மண் எண்ணெய் விளக்கு முன்னால்  எரியும், இரவு நேரங்களில்..  ஆனால் போய்ச்சேர்ந்தவுடன் அவர் செய்கிற முதல் வேலை ஒரு ஆளை அழைத்து ,  ' 

'இந்தா பாரு... இவன் என் பையன்,, ஒழுங்கா கவனிச்சு சாப்பாடு போட்டு அனுத்து  என்பார்  அல்லது அவர் கூடவே சாப்பிட அழைத்து சென்று விடுவார்எந்த ஒரு நடிப்பும், ஈகோ வும் இல்லாத உணமையான பெரிய மனிதர்.

1971 (69???) ஆம் வருடம்திரு.இராம.வெள்ளையன் அவர்கள் நகர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்வழக்கம் போல நாங்க இரண்டு பேரும்தான் எங்கள் ஒற்றை மாட்டு வண்டியில்.   திரு.இராம.வெள்ளையன் இல்லத்தின் முன் ஹாலில் மடக்கு ஸ்டீல் நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன.

உள்ளே பெரிய பெரிய VIP எல்லாம் உட்க்கார்ந்து இருக்காங்கபெருங்கூட்டம்இவர் பெரியவர் .. உள்ளே நுழைகிறார்.. வெள்ளையன் அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். அங்கு வந்திருந்த அனைவருக்கும் கலர் பானம் ( வின்சென்ட, நன்றாக நினைவு இருக்கிறது ) கொடுக்கிறார்கள்.   கையை நீட்டி என்னை அழைக்கிறார்இங்கன வந்து உக்காரு.. எங்கே போறே என்று பக்கத்தில் வைத்து கொள்கிறார்மிக்சர் கொண்டு வாகலர் கொடுன்னு ஒரு அதிகாரம் எனக்காக... எப்படிபட்ட மனிதர்களுடன் வாழ்ந்து இருக்கிறோம் என்று எண்ணும் போது வாழ்வின் சுகம் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறது.


அண்ணாமலை ஐயாவின் தம்பி சுந்தரய்யா..  முன் பகுதியில் குறிப்பிட்டு இருந்த மாட்டுப் பண்ணையை வைத்து நடத்தியவர். அதுக்கு மேலே.. ஒரு சைக்கிள் வைத்து இருப்பார்அதில் என்னை பின்னால் உட்க்கார வைத்து டபுள்ஸ் ஒட்டி செல்வார்முக்கால் வாசி நகரப்பள்ளிக்கூடத்துக்கும், ராம .சாமி  வீட்டுக்கும் அவர் என்னை வைத்து சைக்கிளில் மிதித்து செல்வார்ஒரு சமயம் ( அப்போது அவருக்கு கொஞ்சம் வயது ஆகி விட்டதுவட்டாணம் ரோடு குளக்கால் வழியாக என்னை வைத்து சைக்கிளை  மிதிக்கிறார்.   குளக்கால் அப்போது எல்லாம் அடிக்கடி தண்ணீர் ஓடிக்கொண்டு இருப்பதனால்  ஆற்றை போல மணல் அதிகம் இருக்கும்அவர் சிரமப்படுகிறாரே  என்று நான் கேரியரில் இருந்து இறங்குகிறேன்உட்க்காரு மணிஐயா ஓட்டுவேன் பாரு என்கிறார் சின்னப்பிள்ளையாக ...
சுந்தரய்யாவுக்கு :

செந்தி அண்ணே
காசி அண்ணேதென்னைமரத்தார் வீட்டில் திருமணம் செய்தவர்
பெரிய வள்ளியப்பன் அண்ணே
சின்ன வள்ளியப்பன் அண்ணே
செந்தி அண்ணனுக்கு அடுத்து மீனி ஆச்சி , கண்ட தேவி ரோடில் மணம் செய்து கொடுக்கப்பட்டவர்.

திருச்சுழியார் வீட்டின் இடது புறம்

சொக்கலிங்கம் செட்டியார் : அந்தக்காலத்தில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் (கிழக்கு புறம் ) அருணாசலப் பொய்கையின் மேல் கரையில் ஒரு வீடுஅங்கு சிலேட்டுக் குச்சி தயார் செய்யும் இண்டஸ்ட்ரி வைத்து நடத்தி வந்தார்.   வெள்ளை மாவு மூடைகளில் வரும்அதோடு சிவப்பு சாயம் கலந்து சிவப்பு மாவாக ஆக்குவார்கள்அடுத்து ஒரு பச்சை வண்ணம்அப்புறம் natural வெண்மை மாவுமூன்றையும் ஒரு விகிதத்தில் சேர்த்து இடியாப்பம் பிழிகிற மாதிரி இருக்கின்ற பெரிய சைஸ் மெஷினில் இட்டு கைகளில் திருகி அழுத்துவார்கள்கிழே மூவர்ணத்தில் மாவு சிலேட்டு குச்சி சைசில் இறங்கும்மரத்தட்டுக்களில் மடித்து மடித்து பிடித்து ஈரம் உலரும் முன்பே அளவை வெட்டி காயவைத்து விடுவார்கள்பின்னர் காய்ந்தவுடன் முனை தீட்டுகிற ஒரு (சாணை பிடிப்பது போல ) மெஷினில் முனை கூராக்கி குச்சிகள் தயார்

அப்புறம் பேக்கிங்  செக்ஸன் .   கார்டு போர்டு  அளவாய் வெட்டப்பட்டு வஜ்ரம் எனும் பசை கொண்டு ஓட்டப்பட்டு அட்டைப்பெட்டிகள் ரெடியாகும்இந்தக் குச்சிகள் அவற்றுள் அடைக்கப்பட்டு பேக்கிங் ரெடிஇவற்றை கள்ளி பெட்டிகளில் அடைத்து டெஸ்பாட்ச் ....  வட இந்தியா வரை இந்த குச்சிகள் தேவகோட்டையில் இருந்து சென்று கொண்டு இருந்தன . 1960களிலேயேஅதன் பின் இந்த குச்சி கம்பெனி ஜமீன்தார் வீட்டின் இடது புறம் இருந்த ஒரு வளவில் நடந்ததுபின்னர் அப்படியே நசிந்து விட்டதுஇந்த  சொக்கலிங்கம் செட்டியார் அவர்களின் புதல்வர் காளை அண்ணன் அவர்கள். அவரது புதல்விகள் கலைச்செல்வி, விஜயா  என்னை நன்கு அறிவார்கள்தெய்வானை ஆச்சி, மற்றும் வள்ளி ஆச்சி பெண் மக்கள் .

அடுத்தவர் பூமி நாதன் செட்டியார்அவரது மக்கள் சுப்பையா அண்ணன் , திண்ணப்பன் அண்ணன் மாற்று மீனா ஆச்சிதிண்ணப்பன் அண்ணன்  ஒரு விபத்தில் காலமாகி விட்டார்மீனி  ஆச்சியும் இல்லை என்று நினைக்கிறன்.

அடுத்தவர் திண்ணப்ப செட்டியார்.   இவரது மகன் தான் அண்ணாமலை அண்ணன் . சைவ பிரகாச வித்தியா சாலையில் ஆசிரியர்மற்றவர் சுவாமி நாதன் அண்ணன் (MCC யில் பணி  ஆற்றினார் ), ஏகப்பன்  அண்ணன்சகுந்தலா ஆச்சி, கஸ்தூரி ஆச்சிமீனா ஆச்சி கற்பகம் ஆகியோர் பெண் மக்கள்வட்டாணம் ரோட்டில் இசுலாமிய முன்னேற்ற சங்கம் என்று ஒன்று இருந்ததுமீனாட்சி ஐஸ் கம்பெனிக்கு அருகில். இதை அடுத்து இந்த திண்ணப்ப செட்டியாருக்கு ஒரு வீடு இருந்தது. இந்த வீட்டில் தான் மருதன் சார், அவரது மக்கள் மரகத வள்ளி டீச்சர், வேலு சார் என்ற பெரிய குடும்பம் குடி இருந்தது.  இதில் சட்டை பொத்தான் செய்யும் மெஷின் வைத்து இருந்தார்இவர் 60 களில்  ஆண்டவர் செட் நாயருடன் சேர்ந்து முதன் முதலில் ஐயப்பன் கோவிலுக்கு யாத்திரை சென்ற செட்விடியற்காலையில் பஜனை செய்ய சரண கோஷம்  இடும் சிறார்களின் நானும் ஒருவன்அந்த காலத்தில் இப்போது போல இவ்வளவு பேர்  செல்லவில்லை.

இதற்கு மேல் அங்கு முக்கியமானவர்கள் லண்டன் தீனா , மற்றும் இசுலாமிய சகோதரர்கள்நாளை பார்ப்போமே .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60