அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 64
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 29-09-2018 பகுதி: 64 அன்புசொந்தங்களே ... கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் அன்று எழுதப்பட்ட இந்த ' அசை போடும் தேவகோட்டை நினைவுகள் ' தற்போதும் மீள் பதிவாக புதியதாக நமது நண்பர்களால் வாசிக்கப்பட்டு புதியது போல இன்றும் முகநூலில் பின்னூட்டங்கள் வருவது மகிழ்வாய் இருக்கிறது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்கிற சி.ஆர் . என்கிற இராஜாஜி அவர்கள் நமது தமிழக , இந்திய தேசிய வரலாற்றில் மிக முக்கிய அதி புத்திசாலியான தலைவர். அவர் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர் வேறு திசையில் பயணப்பட்டு விடும். ஆயின் , நமது அடுத்த தலைமுறைக்காக அவர் பற்றிய சில ருசிகரமான அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மட்டும் பதிவு செய்கிறேன். சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற தலைப்புக்களில் இராம காதையையும், மகாபாரதத்தையும் தமிழில் வடித்தவர் இவர். திண்ணன் செட்டி ஊரணிக் கரையில் ...