அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 25

 

அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2:  பகுதி: 25


மான்செஸ்டர் .... பிரித்தானியா நாட்டின் பருத்தித் துணிகளின் தலை நகரம்.  அந்தப் பிரதேசத்தின் நீர் வளம் மற்றும் தட்ப வெப்பம்  துணி உற்பத்தித் தொழிலுக்கு மிகவும் உகந்ததாக இருந்ததால், முதல் துணி நெசவு ஆலை  அங்கு 1783 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஆர்க்ரைட் என்பவரால் தொடங்கப்பட்டது.  மேற்கிந்தியத் தீவுகள்  மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர பருத்தி, லிவர்பூல் துறைமுகம் மூலம் வளமையான நீர் நிறைந்த கால்வாய்கள் மூலம் பெரிய கிடங்குகளில் இருப்பு வைக்க ஏதுவான சூழலை கொடுத்தது.




ஆக, மான்செஸ்டர் என்றாலே துணித் தயாரிப்பின் தலை நகரம் என்று ஒரு பெயர் ஆகி விட்டது.  பிரித்தானியர் இந்தியாவை தங்கள் வசம் வைத்து இருந்த போது பருத்தித் துணிகளின் உற்பத்தியை இங்கு வைத்துக் கொண்டு அவற்றை தங்களின்  ஐரோப்பியச் சந்தையில் விற்றுப் பெரும் பொருள் ஈட்டினர்.  அவற்றுள்  குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் பகுதியின் சூரத் , இந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்றது.  அதே போல தென்னகத்தில் கோயம்பத்தூர் தமிழகத்தின் மான்செஸ்டர் என்று இன்று வரை புகழப்பட்டு வருகிறது.

 


என்ன தேவகோட்டை கதையை ஆரம்பித்து மான்செஸ்டர் பற்றியும்  துணி உற்பத்தி பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா ?  எந்தத் துறையை எடுத்தாலும், அதனை எடுத்தாளும் திறமையும், பாரம்பரியமும் தேவகோட்டைக்கு இருக்கிறது. 

கிட்டத்தட்ட 1880 ஆம் வருடங்கள் காலத்தில் நம்ம தேவகோட்டை ஜமீன்தாரிடம் இருந்து வெள்ளைத் துரை மார்கள் முதல் சமஸ்தான அரசர்கள் வரை கடன் வாங்கி இருக்கிறார்கள். வெள்ளைக்காரத் தொழில் அதிபர்களின்  நட்பின் மூலமாக பல் வேறு துறைகளில் தேவகோட்டை ஜமீன்தார் முதலீடு செய்து வந்தனர்.  பருத்தி நூல் மற்றும் பருத்தித் துணி உற்பத்தி செய்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்கின்ற தொழில் நல்ல வளமாய் நடந்து கொண்டு இருந்ததால், தேவகோட்டை  ஜமீன்தார் திரு.அருணாச்சலம் செட்டியார் , கேரள மாநிலத்தின் கோழிக்கோடு அருகே 'மலபார் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி' என்ற பெயரில் மிகப்  பெரிய அளவில் ஒன்றிணைந்த நூற்பு மற்றும் நெசவாலையை 1885 ஆம் ஆண்டு தொடங்கினார்.

ஜமீன்தாருக்கு பல முதலீடுகள். இந்த ஸ்பின்னிங் மற்றும் வீவிங் முழுக்க ஐரோப்பியத் தொழில் நுட்பம் கொண்டு ஐரோப்பிய இயந்திரங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.  தொழில் நுட்பமும் வேண்டும், கணக்கு வழக்குகளிலும் திறமை தேவை. தொழிலின் வியாபாரத் தொடர்புகள் ஆங்கிலேய தொழில் வல்லுநர்கள் மற்றும் வியாபாரிகளுடன்..இதற்கு சிறந்த ஆங்கில அறிவும் தேவை.

 

இந்த அத்தியாவசிய  அறிவுள்ள ஒருவர் இல்லாத காரணத்தால்  கொஞ்சம் கொஞ்சமாக தொழிலில் நட்டம் வர ஆரம்பித்தது. ஜமீன்தார் நட்டத்தில் மூழ்கிக் கொண்டு இருக்கும் கம்பெனியை எப்படி மீட்பது என்ற யோசனையில் இருந்தார்.

 


அதே நேரம் தேவகோட்டை திரு.பெரிச்சியப்ப செட்டியாருக்கும், திருமதி. மெய்யம்மை ஆச்சி அவர்களுக்கும் மகனாக 1861  ஆம் ஆண்டு பிறந்தவர் திரு.P. சோமசுந்தரம் செட்டியார், ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகப்பெரும் புலமை பெற்று விளங்கினார்.  நகரத்தார் சமூகத்தில் உதிரத்தோடு கலந்து இருக்கும் வணிக உத்திகள் அவரிடம் மிகவும் அதிகமாகவே இருந்தது.   வயதுக்கு மீறிய தீட்சண்ணிய புத்திக்கூர்மை கொண்ட திரு P.சோமசுந்தரம் செட்டியார், ஜமீன்தார் அருணாச்சலம் செட்டியார் அவர்கள்  கண்களில் பட்டார்.   அவரைத் தனது முகவராக (ஏஜெண்ட்) 1899 இல் நியமித்தார். அப்போது திரு P. சோமசுந்தரம் செட்டியார் அவர்களுக்கு வயது 38 தான்.  ஆனால் அறிவு முதிர்ச்சி.  தனது உறைவிடத்தையே கோழிக்கோடுக்கு மாற்றிக் கொண்டார். 



திரு. P.சோமசுந்தரம் செட்டியார் தீட்சண்ய அறிவு கொண்டவர் என்றால், ஜமீன்தார் அருணாச்சலம் செட்டியார் தொலை நோக்கு கொண்டவர்.  அவரின் கணிப்பு பொய்க்கவில்லை.   மிகக்  குறுகிய காலத்திலேயே  திரு .P.சோமசுந்தரம் செட்டியார் நட்டத்தில் இயங்கி வந்த 'மலபார் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி' யை தனது சொந்தக்காலில் நிற்கும் வண்ணம் வைத்தார்.

 


உங்களுக்கு எல்லாம் ஒரு எண்ணம் எழும். அதாவது ஏன் நூற்பு மற்றும் நெசவாலை கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஆரம்பிக்கபட்டது என்று? .   நிதி மேலாண்மையாளராகப் பணி  புரிந்தாலும் நான் இருக்கும் பெரும்பாலான துறை ('டெக்ஸ்டைல்ஸ் ' ) துணி மணி உற்பத்தி ஆலைகளும் பன்னாட்டு வணிகங்களும் ஆகும்.  அந்த அடிப்படையில் சில சுவையான செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

'காலிகோ பிரிண்ட்' (CALICO PRINT ) என்றொரு துணி வகை கேள்விப்பட்டு இருப்பீர்கள். முழுவதும் PROCESS செய்யப்படாத UNBLEACHED பருத்தித் துணி வகை.  காலிகட் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட கோழிக்கோடு பகுதியில் இருந்து உற்பத்தி ஆகி வந்த துணி வகை இது.  அதனால் தான் இந்த ரகத்துக்கு 'காலிகோ' (CALICO ) என்று பெயர் வந்தது. 11 ஆம் நூற்றாண்டுக்  காலத்திலியே இந்த வகை துணி கோழிக்கோடு பகுதியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது.  12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹேமச்சந்திரா என்பவர் காலிகோ துணியில் தாமரை ஓவியங்கள் இடம் பெற்று இருப்பதை பற்றி எழுதி இருக்கிறார்.  மேற்குக்  கடற்கரையில் இது மேலும் பயணித்து சூரத்தில் மிகப் பிரபலம் அடைந்தது. 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலிகோ துணி வகை எகிப்து நாட்டின் தலை நகரில் விற்பனைக்கு கிடைத்து இருக்கிறது.  இப்போது புரிகிறதா கோழிகோடுக்கு நெசவுத் தொழிலின்  பின்னணி?..

 சரி.. இப்போது PSS கதைக்கு வருவோம்நட்டத்தில் இருந்து ஜமீன்தாரின் நூற்பாலை மற்றும் நெசவாலை வெளியே வந்து விட்டது.    இந்த தொழில் என்றும் இளமை மாறாது... ஆனால்  கோவைதான் இந்த தொழிலுக்கு சரியான இடம் என்று  சோமசுந்தரம் செட்டியாருக்கு மனதில் அன்றே தெரிந்ததுதமது எண்ணத்தை தேவகோட்டை ஜமீன்தாரிடம் சொல்லி. 1907 ஆம் ஆண்டு வாக்கில் கோவையில் 'காளீஸ்வரா மில்ஸ்' உருவாக்கப் பணிகள் நடக்க ஆரம்பித்து 1910 ஆம் ஆண்டில் உற்பத்தியும் தொடங்கப்பட்டு விட்டது.

 காளை மில்ஸ் மற்றும் காளீஸ்வரா மில்ஸ் இரண்டும் இலாபத்தை பல மடங்கு பெருகின. 100 ரூபாய்க்கு விற்ற ஒரு பங்கின் மதிப்பு சந்தையில் 600 ரூபாயையும் கடந்து மேலே சென்றதுஅன்றைய பிரித்தானிய அரசு சாத்தப்பா செட்டியாரின் நிர்வாக மேலாண்மைத் தகுதியை பாராட்டும் விதமாக 'திவான் பகதூர்' பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தியது.   நிலை உயரும் பொது பதவிகள் தேடி வரும்..  PSS மேலவை (M L C) உறுப்பினராக்கப்பட்டார்அதிலும் நகரத்தார் வகுப்பினராக இருந்த போதும் மதராஸ் ராஜதானியின் மேல் சபை உறுப்பினர் என்ற முறையில் 1922 ஆம் வருடம் ஏற்பட்ட மாப்பிளா கிளர்ச்சியின் போது  அடித்தட்டு மக்களின்  பக்கம் நின்று அவர்களுக்கு துணை நின்றார்.

 


அதென்ன மாப்பிளா கிளர்ச்சி என்று கேட்கிறீர்களா?  வாருங்கள் கொஞ்சம் பின்னோக்கி 1921 ஆம் வருடம் இன்றைய கேரளாவின் (அன்றைய மதராஸ் ராஜதானி) மலபார் பகுதிக்கு பயணம் செய்வோம்..

 

பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான  வெள்ளையர், சாதி இந்துக்களை தங்கள் கருவிகளாகப் பயன்படுத்தி  அவர்கள் மூலம் பெரும் மக்கள் திரளை தம் கட்டுக்குள் வைத்து இருந்தனர். உயர் சாதிகளை வளரவிட்டு அவர்கள் மூலம் பெரும்பாண்மை தாழ்த்தப்பட்ட சமூகத்தை உருவாக்கி தங்கள் கட்டுக்கள் வைத்து இருப்பது நல்ல அரசியல் தந்திரம்.  இப்ப மட்டும் என்ன வாழுகிறது, சரித்திரத்தைத் திருப்பிப் பார்த்தால்  அழிக்க  இயலாத நோய். அயலாரிடம் மண்டியிட்டு அவர்களைப்  போல் நடை உடையில் தம்மை மாற்றிக் கொண்டு ஆதி வருடி அதிகார போதையில் தமது இனத்தையே தானே உண்ணும் விரோதிகள் இன்று போல அன்றும் உண்டு.

 

அதென்ன மாப்பிளா கிளர்ச்சி என்று கேட்கிறீர்களா?  வாருங்கள் கொஞ்சம் பின்னோக்கி 1921 ஆம் வருடம் இன்றைய கேரளாவின் (அன்றைய மதராஸ் ராஜதானி) மலபார் பகுதிக்கு பயணம் செய்வோம்..

 

பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்களான  வெள்ளையர், சாதி இந்துக்களை தங்கள் கருவிகளாகப் பயன்படுத்தி  அவர்கள் மூலம் பெரும் மக்கள் திரளை தம் கட்டுக்குள் வைத்து இருந்தனர். உயர் சாதிகளை வளரவிட்டு அவர்கள் மூலம் பெரும்பாண்மை தாழ்த்தப்பட்ட சமூகத்தை உருவாக்கி தங்கள் கட்டுக்கள் வைத்து இருப்பது நல்ல அரசியல் தந்திரம்.  இப்ப மட்டும் என்ன வாழுகிறது, சரித்திரத்தைத் திருப்பிப் பார்த்தால்  அழிக்க  இயலாத நோய். அயலாரிடம் மண்டியிட்டு அவர்களைப்  போல் நடை உடையில் தம்மை மாற்றிக் கொண்டு ஆதி வருடி அதிகார போதையில் தமது இனத்தையே தானே உண்ணும் விரோதிகள் இன்று போல அன்றும் உண்டு.  கருவியாக (உயர்) சாதி இந்துக்கள் பயன்படுத்தப் பட்டதால், ஏழை விவசாயிகளின் கோபம் இந்துக்களின் மேல் காட்டும் கோபமாக திரிக்கப்பட்டது.

 

உண்மையில் ஆரம்பத்தில் இந்த கிளர்ச்சி பிரித்தானிய  ஆளுமைக்கு எதிராக, காலனியின் கட்டுப்பாட்டில் இருந்த நிறுவங்களான  புகை வண்டி நிலையங்கள், தபால் தந்தி அலுவலகங்கள், நீதி மன்றங்கள் இவற்றின் மேல் வன்முறைகளாக எழுந்தன .

 

மேலும் பல செய்திகளை அறிய ஆவல் மீறுகிறதா?  பொறுத்து இருங்கள் அடுத்த பதிவுக்கு ..

 

அதுவரை விடை பெறுவது ..

 

கவிக்கிறுக்கன்  முத்துமணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60