16. தோல் பாவை நிழற் கூத்து.... - சாவக வயாங் கூளித் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

16. தோல் பாவை நிழற் கூத்து.... - சாவக வயாங் கூளித் தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,,, பாவைக் கூத்து இங்கு இந்தோனேசியா வந்து சேர்ந்த புதிதில், ஒரு முக்கிய சாலையைக் கடந்த போது போக்குவரத்து அந்தச்சாலையில் தடை செய்யப்பட்டு இருந்தது. என்ன காரணம் என்று விசாரித்தேன். 'அந்தப் பகுதியில் 'உபச்சாரா' நடந்து கொண்டு இருக்கிறது. அந்த உபச்சாராவின் ஒரு பகுதியாக 'பாவை' வருகிறது, அதனால் இந்தச்சாலை இப்போதைக்கு மூடப்பட்டு இருக்கிறது', என்றார்கள். 'உபச்சாரா' , 'பாவை' என்பதெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்ட மாதிரியே ஒரு பிரமை ஆனால் மனதுக்குள் புரியவில்லை. நானும் ஒரு 'பாவை' போலத் தலையை ஆட்டி விட்டு மாற்றுப் பாதையில் வழி தேடித் சென்று விட்டேன். இது நிகழ்ந்தது ஆகஸ்டு மாதம், 1988 ஆம் வருடம் கீழைச்சாவாகத்தின் சுரபயா நகரில். PAWAI-INDONESIAN CULTURAL PARADE மனம் மட்டும் ''உபச்சாரா' வையும், 'பாவை' யையும் நினைத்துக் கொண்டிருந்தன. ...