இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'காமராஜ'ரும்... 'இந்திரா' வும்- தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்

படம்
    தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள் 'காமராஜ'ரும்... 'இந்திரா' வும்   திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் சரி , புலவர் கீரனும் சரி ... தமது சொற் பெருக்கின் இடையே அன்றைய கால கட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து இலை மறை காய் மறைவாய் பகடி   செய்வது உண்டு .  அது 1971 ஆம் வருடம் .... இதற்கு முன் ஒரு செய்தி முன்னோட்டம் : பாரத நாடு அரசியல் களத்தில் நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி அம்மையாரை பலரின் கிண்டல்களையும் மீறி அரியணை அமர்த்தியதில் பெரும் பங்கு கொண்டவர் தமிழகத்தின் கர்ம வீரர் காமராசர் . 1969 ல் இந்திய தேசிய காங்கிரசில் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர் , மொரார்ஜி தேசாய் , எஸ் . நிஜலிங்கப்பா ஆகிய காங்கிரசின் முன்னணி தலைவர்களால் உருவாக்கப்பட்ட     “ சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது . சிண்டிகெட் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும் , வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் இந்திரா காந்தியை நவம்பர் 1969 ல் ...

தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்

படம்
  தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள் அந்தக் காலத்திலேயே ஒரு ஒழுங்கு முறையுடன் , முத்தமிழும் முழங்க சைவம் தழைக்க அதே நேரத்தில் மனம் மகிழ் விதமாகவும் , அறிவார்ந்த விதமாகவும் நிகழ்ச்சிகளை நிரவி வழங்கி வந்த தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாக்   கழகத்து பெரியோர்களை மீண்டும் ஒரு முறை வணங்கி சில நினைவுகளை அசை   போடுகிறேன் . கந்தன் விழா என்ற போதும் ஒரு ஒழுங்கு முறை ... எம்முடைய தேவகோட்டைக் காலத்தில் ( நகர் நீங்கி 37 வருடங்கள் ஓடி விட்டன .. தற்போது நினைவுகளில் மட்டுமே கந்தன் கழக   நிகழ்வுகள் எம்முள்ளே ).   முதல் நாள் நிகழ்வினைத் தொடர்ந்து பல்லாண்டுகளாகத் தொடங்கி வைப்பவர் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் .   முதல் வரிசைகளில் அமர்ந்து கதை கேட்டு இடைஇடையே வரும் அவரது வினாடி வினாக்களுக்குப்   பதிலிருத்து சிறிய புத்தகங்கள் பரிசாய் பெறுவதில் போட்டி இட்ட நண்பர்கள் முகங்கள் சில நினைவில் நிற்கின்றன . அதே நாளில் வாரியார் சுவாமிகளுக்குப் பின்னும் அதற்கு அடுத்த நாளும் , இலக்கியப்  ...
படம்
 தேவகோட்டை கந்தர் சஷ்டி விழா... நினைவுகள் .. தீபாவளி வந்து விட்டால் மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு என்னவோ, புத்தாடைகளும், புகை விடும் பட்டாசுகளும் தான் நினைவில் வரும். தேவகோட்டையில் இருந்த எங்களுக்கோ, தீபாவளியில் இருந்து ஆரம்பிக்கும் கந்த சஷ்டி விழா, 9 நாட்களும்  இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் பொழிந்து விட்டுச் செல்லும் ஐப்பசிக்  கொடை .   பல நேரங்களில் தானாகவே ஞாபக மேகங்களாக நினைவின் வானத்தில் மிதந்து செல்லும் எமது பால  பருவ நினைவுகள்..... கருதா ஊரணிக் கரையில் இருக்கும் சைவப் பிரகாசா வித்தியா சாலையிலும், பின்னர் சிவன் கோவில் குளக்கரையில் இருந்த திருவேங்கடமுடையான் (தற்போது சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி ) பள்ளியிலும் பயின்ற காலம்.  இந்த கந்தர் சஷ்டி விழாத் திடல் மணல் பரப்பி, தென்னைக்  கிடுகுகளுக்குள், வெள்ளாடையும், பச்சை. சிவப்பு வண்ணங்களில் ஓரத்து அலங்காரமுமாக எழும்பிக் கொண்டிருக்கும் போதே எங்களுக்கு வேடிக்கைத் திடலாகி விடும்.   அருமையான நிகழ்வுகள்..அந்த சிற்றூரில்..... டிஜிட்டல் பலகைகள் இல்லாத காலம்.  பகல் நேரத்தில் ஒரு கரும்பலகை...