'காமராஜ'ரும்... 'இந்திரா' வும்- தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்
தேவகோட்டை
கந்தன் விழா நினைவுகள்
'காமராஜ'ரும்...
'இந்திரா' வும்
இதற்கு முன் ஒரு செய்தி முன்னோட்டம் :
பாரத
நாடு அரசியல் களத்தில் நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி அம்மையாரை பலரின் கிண்டல்களையும் மீறி அரியணை அமர்த்தியதில்
பெரும் பங்கு கொண்டவர் தமிழகத்தின் கர்ம வீரர் காமராசர்.
1969ல் இந்திய
தேசிய காங்கிரசில் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகிய
காங்கிரசின் முன்னணி தலைவர்களால் உருவாக்கப்பட்ட “சிண்டிகேட்”
குழுவுக்கும் பலப்பரீட்சை
நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும், வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் இந்திரா காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு
விலக்கினர்.
இதனால் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரஸ் என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது.
காமராசருக்கும்,
இந்திரா காந்தி அம்மையாருக்கும் கருத்து வேறுபாடு
முற்றிய நேரம். 1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது.
இப்ப
நம்ம சிவன் கோவில் திடலுக்கு வாருங்கள்.. வருடம் 1971. புராணக்
கதையில் வரும் ஒரு காட்சியினை புலவர்
கீரன் அவருக்கே உரிய வகையில் கதா
பாத்திரங்களாக மாறி விவரித்துக் கொண்டு
இருக்கிறார். காட்சியில்
தேவேந்திரனான 'இந்திரனுக்கும்', 'மன்மதனு'க்கும் (மன்மதனின்
இன்னொரு பெயர் காம ராசன்) பகை..
இருவரும் சமர் களத்தில்
சந்திக்கிறார்கள்...
இப்போது
புலவர் கீரன் அவர்கள் குரலில்,
அதற்கு இந்திரன்:
ஹலோ....
காமராசா
.... எப்படி
இருந்த போதும் சபையின் மைய மண்டபத்தின் அரியாசனம் என்னுடையது.... பதவி எம்முடையது...
காமராசர்:
ஏய்
இந்திரா
...
இந்திரன் :
ஏய்
...காம ராசா ...
இப்படி
எத்தனையோ சம்பவங்கள். பெருந்திரளான
கூட்டத்தையும் தமது வார்த்தைகளால்
கட்டிப்போடத் தெரிந்த தமிலேறு, புலவர் கீரன் அவர்கள்.
நினைவுகள்
தொடர்கதை........
கருத்துகள்
கருத்துரையிடுக