சீமையில் வாடிய சிவகங்கை வாரிசு
சிவகங்கைச் சீமை என்றாலே, வீர மங்கை வேலு நாச்சியாரும், கம்பீரத் தோற்றப் பொலிவோடு, சாந்துப் பொட்டு தளதளங்க சந்தனப் பொட்டு கமகமக்க மதுரைக் கோபுரம் தெரிந் தி டச் செய்த மருது பாண்டியரும் தான் தமிழர் எவரின் நினைவுக்கும் வருவார்கள். குருதி கொப்பளித்து விடுதலை வேட்கையில் சிவந்து கிடந்த அந்த மண்ணின் மைந்தன் என்ற வகையில் மருது பாண்டியர் வாரிசுக்கு நடந்த பயங்கரம் பற்றிய சிறு குறிப்பை நம் மக்களோடு பகிர்வதே இந்தத் தொகுப்பு. குறு நிலங்களாக, பாளையங்களாக தமிழகம் தன்னாட்சி பெற்று தலை நிமிரந்து நின்ற காலம். சிவகங்கைச் சீமை தன்னேரில்லாத அதன் சமஸ்தானமாக வலிவுடனும, பொலிவுடனும் நிமிர்நது நின்றிருந்தது. வெள்ளையர் அவர் வசூல் உரிமைதனை ஆற்காட்டு நவாபிடம் இருந்து பெற்று பாளையங்களை வரி கட்டுமாறு அழுத்தம் கொடுத்த நேரம். ஆனால், வெள்ளையர்கள் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் இருந்த ஒரே குறுநில மன்னர்கள் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் மட்டுமே!. வெள்ளைத் துரை மா ர் களின் வேட்டைத் தோழர்களாகவும், விளையாட்டு நண்பர்களாகவும் திக ழ் ந்தவர்கள் மருதிருவர்....